சுயநலவாதியை அடையாளம் காண்பது எப்படி?

வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம்.


இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன்.


1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன்.


2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன்.


3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில் சரளமாக பேசி வெறுப்பேத்துபவன்.


4.கூட்டமான கோவிலின் வெளியே தன் புதுச்செருப்பில் ஒன்றை ஒரு இடத்திலும் மற்றொன்றை 10 அடி தள்ளி மற்றொரு இடத்திலும் வைப்பவன்.


5.நமக்கு ஸ்வீட் வாங்க கடைக்கு போனால் நமக்கு முன் ஒரு பீஸை எடுத்து வாயில் போட்டு நாமமெடுக்க முடியாமல் செய்ததோடு அல்லாமல் "நல்லாருக்கு வாங்கலாம்டா" என்று கூறுபவன்.


6.இருக்கிற பைசாவில் எல்லாரும் சரக்கடிக்கலாம் என்று டாஸ்மார்க்குக்கு போனால் பீர் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவன்.


7.ரோட்டில் போகும் அழகான பெண் "அத்திப் பூத்தாற்போல்" பார்த்து சிரிக்கும் போது "இவள பார்த்தா ஒரு ஜாடையில உன் தங்கச்சி மாதிரியே இருக்குல்ல" என்று கூறுபவன்.


8.பஸ்ஸில் ஐம்பது பைசா கிடைக்காதென்பதால் தேவையே இல்லாமல் 2ரூபாய் கொடுத்து 1.50ரூபாய்க்கு ஏதாவது வாங்கி ஐம்பது பைசா மாற்றி வைத்துக்கொள்பவன்.


9.நமக்கு புடவை எடுக்க செல்லும் போது கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் முதலில் பார்த்த புடவையே நன்றாக உள்ளது என்று எடுக்க சொல்பவள்.(இது பெண்ணுக்கு)


10.ஒரு இசை அமைப்பாளன் கஷ்டப்பட்டு அமைத்த பாடலை "என் மச்சானுக்கு டெடிகேட் பண்ணிக்கிறேன்" "என் மாமாவுக்கு டெடிகேட் பண்ணிக்கிறேன்" என்று கூறுபவன்.


11. ஒருத்தன் தன் இருபத்தைந்தாவது பதிவுக்காக (அட இதுதாங்க) கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏதாவது ஒப்பேத்தி போட்டால் பின்னூட்டம் போடாமலும் வாழ்த்து சொல்லாமலும் செல்பவன்.


டிஸ்கி: இதெல்லாம் கிட்டதட்ட பழமொழி மாதிரி அதனால அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

22 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஸ்ரீமதி said...

ம்ம்ம்ம் ஐடியா நல்லாருக்கு..:)) 25-வது பதிவுக்கு வாழ்த்துகள்... :)))))

Bleachingpowder said...

ஹா..ஹா..ஹா... எல்லாமே சரவெடி...மிகவும் ரசித்தேன் உங்களோட 25-ஆவது பதிவை. வாழ்த்துகள்.

கிரி said...

//கூட்டமான கோவிலின் வெளியே தன் புதுச்செருப்பில் ஒன்றை ஒரு இடத்திலும் மற்றொன்றை 10 அடி தள்ளி மற்றொரு இடத்திலும் வைப்பவன்//

இப்படி எல்லாம் யோசிக்கறாங்களா! கில்லாடியா இருக்காங்கப்பா

//ஒருத்தன் தன் இருபத்தைந்தாவது பதிவுக்காக (அட இதுதாங்க) கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏதாவது ஒப்பேத்தி போட்டால் பின்னூட்டம் போடாமலும் வாழ்த்து சொல்லாமலும் செல்பவன்//

:-)))

உங்கள் 25 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

naan suyanalavaadhi illai!!! vaazhthukkal!

நான் ஆதவன் said...

//ம்ம்ம்ம் ஐடியா நல்லாருக்கு..:)) 25-வது பதிவுக்கு வாழ்த்துகள்... :)))))//

நன்றி தங்காச்சி..நீ கண்டிப்பா சுயநலவாதி இல்லம்மா...

நான் ஆதவன் said...

//ஹா..ஹா..ஹா... எல்லாமே சரவெடி...மிகவும் ரசித்தேன் உங்களோட 25-ஆவது பதிவை. வாழ்த்துகள்.//

அடடே வாங்க தல....வாழ்த்துக்கு நன்றி தல...

நான் ஆதவன் said...

//இப்படி எல்லாம் யோசிக்கறாங்களா! கில்லாடியா இருக்காங்கப்பா //

ஆமா கிரி...எப்படியெல்லாம் நோட் பண்ணி கண்டுபிடிச்சிருக்கேன் பாருங்க..

//உங்கள் 25 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி கிரி. உங்களுடைய தமிலிஸ் ஓட்டுக்கும் தான்....

நான் ஆதவன் said...

//naan suyanalavaadhi illai!!! vaazhthukkal!//


ஒத்துக்கிறேன் நீங்க சுயநலவாதி இல்ல....

moulefrite said...

silver jubilee பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒன்றில் தற்பாதுகாப்பு தன்மை உடையது (செருப்பை பிரித்து போடுவது ) நம் செருப்பை நான்தானே பாதுகாக்க வேண்டும் உங்கள் செருப்பை நீங்கள் இழக்க தயார் என்றால்
அது உங்கள் விருப்பம் அல்லவா
அது எப்படி சுயனலமாகும் ?

நான் ஆதவன் said...

//silver jubilee பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒன்றில் தற்பாதுகாப்பு தன்மை உடையது (செருப்பை பிரித்து போடுவது ) நம் செருப்பை நான்தானே பாதுகாக்க வேண்டும் உங்கள் செருப்பை நீங்கள் இழக்க தயார் என்றால்
அது உங்கள் விருப்பம் அல்லவா
அது எப்படி சுயனலமாகும் ?//

முதலில் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

நான் இங்கு குறிப்பிடுவது எல்லாம் காமெடிக்கே...இதை சீரியஸாக எடுக்க வேண்டாம். நான் பதிவில் கூறியதே இங்கு குறிப்பிடுகிறேன்
"அனுபவிக்கலாம் ஆனா ஆராயக்கூடாது" :-))

நான் ஆதவன் said...

தம்லிஸில ஓட்டு போட்ட நண்பர்களுக்கு நன்றி.

mathynilaa said...

நல்லா இருக்கு .உங்க இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ,மேலும் வளரனும் .இன்று தான் இதை பார்த்தேன் .மிகவும் பயனுள்ளவை . அக்கா நிலாமதி .

நான் ஆதவன் said...

//மிகவும் பயனுள்ளவை . அக்கா நிலாமதி //

நன்றி அக்கா நிலாமதி. நீங்க மிகவும் பயனுள்ளவைன்னு சொல்லியிருக்கீங்க இது உண்மையாவா? இல்ல கலாய்கிறீங்களான்னு தெரியல :-)

Kabheesh said...

உங்களப் பத்தி தானே சொல்லியிருக்கீங்க? :-)

நான் ஆதவன் said...

(ஸாரி பல்லவன் உங்க கமெண்ட் தெரியாம டெலிட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். ஆனா மேட்டர் நான் படிச்சுட்டேன்.)
ஆமா பல்லவன்.. இனியும் தொடர்வோம் பல்லவன்.
வாழ்த்துக்கு நன்றி.

நான் ஆதவன் said...

//உங்களப் பத்தி தானே சொல்லியிருக்கீங்க? :-)//

இப்படியெல்லம் பப்ளிக்கா எதையும் கேக்கப்படாது...

chinnu said...

hi da...really fantastic..I enjoyed a lot reading ur msgs. Really joyful and truthful..room pottu yosipiyo???

chinnu said...

hi da...really fantastic..I enjoyed a lot reading ur msgs. Really joyful and truthful..room pottu yosipiyo???

நான் ஆதவன் said...

thanks chinnu...

மங்களூர் சிவா said...

ரைட்டு!
25க்கு வாழ்த்துக்கள்!

நான் ஆதவன் said...

//மங்களூர் சிவா said...
ரைட்டு!
25க்கு வாழ்த்துக்கள்!//

ரைட்டு...ரொம்ப தாங்ஸ்

vinoth kumar said...

சூப்பர் பட் நம்ம பசங்கல நெனச்சிக்கிட்டு எழுதலனு நேனைகிரன்.. but appa appa one 2 peru vanthu poranuga :) anyway hearty congragulations for your 25 post... I hope sooon it reach 100 all the best..

Related Posts with Thumbnails