கலைஞர் டி.வி, சன் டி.விக்கு தீபாவளி டிப்ஸ்..

தீபாவளி நெருங்கியாச்சு.தமிழர்கள் கொண்டாடலாமா வேண்டாமான்னு ஒரு சில பேர் தீவரமா விமர்சனம் செய்யிராங்க. என்னை பொருத்த வரைக்கும் தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையா சந்தோஷமா இருந்தாங்கன்னா அது காதலர் தினமா இருந்தா என்ன தீபாவளியா இருந்த என்ன எல்லாத்தையும் சந்தோஷமா கொண்டாடலாம். ஆனா இந்த வருசம் ஈழத்தமிழர்கள் பல பேர் துயரத்தில் இருக்கும் போது நான் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். யாருக்கும் வாழ்த்து சொல்வதில்லையென்று முடிவெடுத்துள்ளேன். நண்பர்கள் மன்னிக்க.

தலைவர் கலைஞர் என்னத்தான் துக்கத்திலும் துயரத்திலும் நித்திரை இழந்து தவித்தாலும் அவருடைய கலைஞர் டி.வியிலும், மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த (மதுரை மக்களைத் தவிர) சன்.டிவியும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்காமல் இருக்க மாட்டார்கள். அப்படி அவர்களுக்கு இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப சில யோசனைகள்...

கலைஞர் டி.விக்கு...

1. சிறப்பு "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சிக்காக வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பதிலாக ஆற்காடு வீராசாமியை நடிக்க வைத்து அப்பப்ப "இந்த வருடம் மின்வெட்டே ஏற்படலன்னு " என்று மீண்டும் மீண்டும் சொல்லி காமெடி செய்யலாம்.

2.இரவு முழுவதும் கலைஞர் கவிதை முழக்கம் நிகழ்ச்சியை லைவ் ஷோ நடத்தலாம். அதை காலை வரை தொடரலாம். உதவிக்கு பா.விஜயை வைத்துக்கொள்ளலாம். (இரவு நேரமாதலால் வாலியும் அப்துல் ரகுமானும் வேண்டாம்). இது கலைஞர் இரவு உறங்குவதில்லை என்பதற்கு சாட்சியாக இருக்கும்.

3.காலை சுப. வீரபாண்டியனை வைத்து வரலாற்று நிகழ்வுகளை இந்த முறை தவிர்த்து, சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கிய கலைஞர், "பில்லா" "சிவாஜி" போன்ற தமிழ்ப் பெயர் கொண்ட தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு அளித்த தலைவர் கலைஞர் என்று புதிய வரலாற்று நிகழ்வுகளை பற்றி குறிப்பிடலாம்.

4. முக்கியமாக மானாட மயிலாட உருவானது எப்படி? என்ற நிகழ்ச்சியை அரைமணி நேரம் நடத்தலாம். மக்களுக்கு மிக உபயோகமானதாக இருக்கும். இடையிடையே "நீண்ட பணிச்சுமைகள் இருந்த போதிலும் நான் இதை காணத் தவறுவதில்லை" என்று கலைஞரை விட்டு சொல்லச் சொல்லலாம்.

5. "தமிழ் பேசு பத்து காசு" என்று ஒரு நிகழ்ச்சியை நமீதாவை நடுவராக வைத்து ஒளிபரப்பி இராமதாசு அய்யாவை வெறுப்பேற்றலாம்.

சன்டி.விக்கு....

1. திடீர் ஞானோதயம் வந்த சன் டி.வி., காலை சுவாமி சங்கராச்சாரியாரின் அருள் மொழிகளை ஒளிபரப்பலாம்.

2."காதலில் விழுந்தேன்" "சக்கரக்கட்டி" போன்ற படங்களைப் போட்டு மதுரை மக்களின் வயிற்றில் பாலை வார்க்கல்லாம்.

3."கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற படத்தை சிறப்பு படமாக சிம்பாலிக்காகப் போட்டு மற்றவர்களை குளிர வைக்கலாம். அப்படியும் வேலைக்காகவில்லையென்றால் அடுத்து பாயிண்ட்டை ட்ரை செய்யலாம்.

4.ஒரு மாதத்தில் கார்க்கி போடும் பதிவை விட அதிகமாக அறிக்கை விடும் ஜெவின் ஒரு மாத அறிக்கையை தொகுத்து வெளியிட்டு தன் நடுநிலைமையைக் காட்டி கலைஞரை வெறுப்பேற்றலாம்.

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நல்லதந்தி said...

//1. சிறப்பு "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சிக்காக வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பதிலாக ஆற்காடு வீராசாமியை நடிக்க வைத்து அப்பப்ப "இந்த வருடம் மின்வெட்டே ஏற்படலன்னு " என்று மீண்டும் மீண்டும் சொல்லி காமெடி செய்யலாம்.//

பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தி மின் வெட்டுக்குக்காரணம்,
பசங்க விட்ட காத்தாடி மின்சார ஒயர்களின் மீது பட்டதா?.மக்களின் மின்சாரச் செலவைக் குறைக்க கழக அரசு எடுத்த கருணை நடவடிக்கையா? அல்லது பெரிய பெரிய மின்சாரக் கேபிள்களை ஜெயலலிதா ஆட்சியில் பிறந்த எலிகள் கடித்ததாலா?.
இந்த பட்டிமன்றத்திற்க்கு அமாவாசை ஆற்காடு வீராசாமியை நடுவராகப் போடலாம்!

Anonymous said...

your comment is very good guy!!. my hearty wishes to u..
by karthik.P

நான் ஆதவன் said...

thanks karthik

நான் ஆதவன் said...

நன்றி நல்லதந்தி. உண்மையில் பட்டிமன்றத் தலைப்பு எழுத நினைத்து நிறைய ரெடி செய்து வைத்திருந்தேன். பின்பு அதையே ஒரு பதிவாக போடலாம் என்று விட்டு விட்டேன்...

Shefan said...

எது எப்படி இருக்கு, சூப்பர் மச்சி.......கருணாநிதி அவர்கள் நாடகம் நடிப்பது எப்படி எண்டு ஒரு பட்டி மண்டபம் வைக்கலாம் .. ஜெயா வும் பங்குபெறலாம்

ஸ்ரீமதி said...

:)))

Related Posts with Thumbnails