எங்களையும் கூப்பிட்டாகல்ல - சினிமா

யாராவது கூப்பிடுவாங்களா... இல்ல நம்மளா போய் வாலிண்டரா ஆஜர் ஆகலாமா என்று யோசிச்சுட்டு இருக்கும் போது தான் நம்ம இளைய பல்லவன் வாங்க தலைவா உங்கள கூப்பிட நான் இருக்கேன்னார். உண்மையிலே ரொம்ப சந்தோஷமாயிருந்தது. அவருக்கு என் நன்றிகள். அவரை கூப்பிட்ட அணிமாவுக்கு என் நன்றிகள். அணிமாவை கூப்பிட்ட மகேஷ்க்கு என் நன்றிகள்.....போதும் போதும் இதோட நிறுத்திக்கிறேன்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

பள்ளி படிப்பெல்லாம் முடித்த பின்னரே தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் வாங்கினார்கள். திரையரங்கில் பார்த்த படம் "பத்ரகாளி". சிறுவயதில் மதுரை சென்ற போது ஏதோ ஒரு காரணத்திற்கு விடாமல் அழுத என்னை தேற்றுவதற்காக "சினிமாவுக்கு போலாமா" என்று என் அழுகையை நிப்பாட்டி வாக்கு தவறாமல், அருகிலுள்ள ஒரு தியேட்டரில் என் அம்மாச்சி அப்படத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்படத்தைப் பார்த்துவிட்டு பயத்தில் திரும்பவும் அழ ஆரம்பித்தபோது முக்கால்வாசி படத்தோடு திரும்பி வந்தது வேடிக்கை.என்ன உணர்ந்தேன்! பயம் தான்......

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"தசாவதாரம்" துபாயில் உள்ள தியேட்டரில்.... ரீலீசான அன்றே பார்க்க வேண்டும் என்று நண்பரிடம் அடம்பிடித்துக் கூற அவர் ஒரு நாள் முன்னரே டிக்கெட் புக் செய்து பார்த்த படம்(தமிழகத்தை விட ஒரு தினம் முன்னால்). என்ன.. கதை அப்போது ஒன்னும் புரியாமல் அடுத்த வாரம் திரும்பவும் பார்த்தது வேறு விசயம்.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

"தாம் தூம்" மடிக்கணினியில்... ஒரு நாள் நண்பன் "மச்சி "தாம்தூம்" டிவிக்ஸ் ப்ரிண்ட் டவுண்லோட் செய்திருக்கேன் வந்து எடுத்துட்டுப்போ"ன்னான். என்ன உணர்ந்தேன்....மவன எவனாவது ஒரிஜினல் பிரிண்டே கொடுத்து பார்க்க சொன்னாலும் இது போல படத்த பார்க்கக் கூடாதுன்னு. ஒரே ஆறுதல் பாடல்கள்

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

வீடு.. சத்தியமா அது போல் ஒரு யதார்த்த படத்தை தமிழில் அதுக்கு முன்ன பார்த்ததே இல்லை. மனசுல ஒரு வாரத்துக்கு அதோட தாக்கம் இருந்துகிட்டே இருந்தது.வீடு படத்தில் நடித்த அந்த தாத்தாவிற்கு தேசிய விருது கிடைத்தது அனைவரும் தெரியும். தமிழகத்தில் ஒரு பாராட்டு விழாவில் கலந்து, நிகழ்ச்சி முடிந்து போகும் போது பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் நின்றததை பாலா விகடனில் "இவன் தான் பாலா"வில் எழுதியதை படித்த போது மனது கனத்தது.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பெரிதாக எதுவும் இல்லை. அநேகமாக எல்லா அரசியல் தாக்கங்களையும் நண்பர்கள் எழுதிவிட்டனர். லேசாக வெறுப்படைந்த விசயம் ஒன்று உள்ளது. "விரும்பாண்டி" படத்திற்காக கதையே என்னவென்று தெரியாமல் பிரச்சனை செய்தது. ஆனால் கமல் அந்த பிரச்சனைக்காக படத்தின் தலைப்பை மாற்றியது "லைட்டா" பாதித்த விசயம்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் பாதித்ததாக தெரியவில்லை. ஏனென்றால் நமது தொழில்நுட்பம் வளரும் போது அதை விட வேகமாக வளரும் ஆங்கில படங்களை பார்க்க நேருவதால் தெரிவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் தசாவதாரம் படத்தில் வரும் முதல் பத்து நிமிடங்களைப் பார்த்து கொஞ்சம் பிரமித்து போனது நிஜம்.எனவே தொழில்நுட்பத்தை வரலாற்றுப் படங்களில் பயன்படுத்தினால் அது எளிதில் மக்களிடம் சென்றடையும் என்பது என் கருத்து. இப்போது ரோபோ வந்தாலும் ஆங்கில படம் பார்ப்பவர்களுக்கு அந்த படத்தின் தொழில்நுட்பம் பெரிதாக தெரியாதென்றே தெரிகிறது.

தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய...

தமிழ்ச்சினிமா இசை?

தமிழ் சினிமா இசை இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய இடத்தில் இருக்கிறது. தமிழ் இசையமைப்பாளர்கள் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இனி வருங்காலத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் என அடுத்த தலைமுறையும் கலக்க ரெடி....எல்லா இசையமைப்பாளர்களின் மெலடி பாடல்களும் என் உறக்கத்திற்கு உதவி செய்யும்.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் அல்லாத வேறு படங்களும் பார்ப்பேன். மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஒரு படத்தையும் விடுவதில்லை. வங்காள மொழி படங்கள் பார்க்க ஆசை. ஆனால் டி.வி.டி கிடைப்பதில்லை.(ஒரே ஒரு வங்காள மொழிப் படம் பார்த்திருக்கிறேன் அது ஹி..ஹி...ஹி...ஃபயர்) அதிகம் பாதித்த படங்கள் நிறைய... "ப்ளாக்" "ஸ்வதேஸ்" போன்ற இந்தி படங்களும், "தன்மாத்ரா" மலையாளப் படமும் கொஞ்சம் பாதித்தவை. "Bridge to terabithia" என்ற படம். டி.வி மற்றும் சினிமா போன்ற எதையும் பார்க்காத இரு குழந்தைகளுடைய கற்பனை உலகத்தைப் பற்றிய கதையை போகிற போக்கில் சொல்லியிருக்கிற விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. "சாண்ட்ரா புல்லக்" படங்கள் விரும்பி பார்ப்பேன்.

தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கமல், விஜய், விஜயகாந்த், சிம்ரன் என நிறைய பேரை ஷீட்டிங்கில் பார்த்திருக்கிறேன். நான் படிக்கும் பொழுது எனது பாலிடெக்னிக் அருகில் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி இருந்ததால், போர் அடிக்கும் போது உள்ளே சென்று ஷீட்டிங் பார்ப்போம். இதை தவிர வேறு தொடர்புபெதுவுமில்லை. இது சினிமாவை வளர்க்க உதவுமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

எனக்கு ஜோஸியம் எதுவும் தெரியாது. ஆனா ஒரு நடிகனை நடிகனா வைக்காம, கடவுளா இல்ல தலைவனா நினைக்கிற வரைக்கும் தமிழ் சினிமா உருப்படாது. அப்படியிருந்தும் செல்வராகவன், கௌதம் மேனன், மணிரத்னம், அமீர், சேரன், பாலா போன்ற பலர் கீழே போய்ட்டு இருக்கிற தமிழ் சினிமாவை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காங்க. அவுங்கல மாதிரி ஆளுங்க நினைச்சா தமிழ் சினிமாவை எதிகாலத்தில இந்த உலகமே போற்றும் படி செய்யலாம்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

ரொம்ப நல்லா இருக்கும். மூச்சு விட கூட நேரம் இல்லாத இந்த சினிமா உலகத்திற்கு ஒரு பிரேக் அவசியம் தான். ஏன்னா இந்த ஒரு வருசத்தில புது இளம் மற்றும் பழைய கதாசிரியர்கள் ஆற அமர யோசிச்சு நல்ல கதை எழுதலாம். ஏன்னா பெரும்பாலும் ஒரு டைரக்டரோட முதல் படம் மட்டும் சொல்லும்படி இருக்கு. இப்படி ஒரு பிரேக் கொடுத்தா நல்ல கதையம்சம் உள்ள படம் நிறைய வரும். நமக்கும் பார்க்க வேண்டிய பழைய படம் நிறைய இருக்கு. அதெல்லாம் அந்த ஒரு வருசத்தில் பார்க்கலாம். இசையமைப்பாளர்களின் நல்ல நல்ல ஆல்பம் வரும் அதையெல்லாம் கேட்கலாம். என்ன அப்ப தியேட்டர்ல சன் டி.வி கலைஞர் டி.வின்னு எல்லாம் காட்ட ஆரம்பிப்பாங்க...அத மட்டும் பொறுத்துக்கணும்

இதை தொடர கிரி யை அழைக்கிறேன்

கூப்ட பல்லவனுக்கு ஒன்னோரு தபா டாங்ஸ் சொல்லிகிறேம்பா....6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

இளைய பல்லவன் said...

கூப்டதும் பதிவு போட்டதுக்கு நன்றி ஆதவன்.

பாத்திங்களா நீங்களும் நானும் ஒரு விஷயத்துல ஒரே மாதிரி எழுதியிருக்கோம். அதான் ஷூட்டிங் பாக்கற மேட்டர்.

அப்பிடியே, மீ தி பர்ஸ்டா?

இளைய பல்லவன் said...

கூப்டதும் மதிச்சி எழுதினீங்க பாத்திங்களா.. அங்க தான் நீங்க நிக்கிறீங்க. (பரவால்ல உக்காருங்க)

நல்லா இருந்திச்சி பதிவு.

அதுல பாருங்க. ஷூட்டிங் பத்தி நீங்களும் நானும் ஒரே மாதிரி எழுதி இருக்கோம்.

அட, மறந்தே போயிட்டேன்.

மீ த ஃபர்ஷ்டு போட்டுக்கிறேன்.

ஒன்னோரு தபா நன்றி...

கிரி said...

உங்களோடு சேர்த்து மூன்று பேர் இந்த பதிவிற்கு அழைத்து விட்டார்கள் அவ்வ்வ்வ்வ்வ்

//ஒரே ஒரு வங்காள மொழிப் படம் பார்த்திருக்கிறேன் அது ஹி..ஹி...ஹி...ஃபயர்)//

ஹா ஹா ஹா

//கமல், விஜய், விஜயகாந்த், சிம்ரன் என நிறைய பேரை ஷீட்டிங்கில் பார்த்திருக்கிறேன்//

தலைவரை பார்த்தது இல்லையா :-)

//இது சினிமாவை வளர்க்க உதவுமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்//

ரொம்ப தான் குசும்புங்க

நான் ஆதவன் said...

//அப்பிடியே, மீ தி பர்ஸ்டா?//
ஆமா பல்லவன்

நான் ஆதவன் said...

//தலைவரை பார்த்தது இல்லையா :-)//
அவர் ஒருத்தர் தான் பாக்கி கிரி. அவர் எங்க தமிழ்நாட்ல ஷீட்டிங் நடத்தராரு.... முழுபடத்தையும் பெங்களூர், மைசூர்ன்ல எடுக்குறாரு

நான் ஆதவன் said...

//கூப்டதும் மதிச்சி எழுதினீங்க பாத்திங்களா.. அங்க தான் நீங்க நிக்கிறீங்க. (பரவால்ல உக்காருங்க)///
அவ்வ்வ்வ்வ்..கூப்டு வச்சு கலாய்கிறீங்களே பல்லவன்

Related Posts with Thumbnails