மாதம் 37,500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஏழைகள்!!

மத்திய அமைச்சர் ப்ரிய ரஞ்சன் தாஸ் முன்ஸி இன்று பிற்பட்ட மக்கள் நலத்திற்காக பாடுபடும்(!) தமிழக முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது உயர்கல்வி நிறுவனத்தில் பின் தங்கியவர்களின் முன்னேறிய பிரிவினர் சேருவதற்கு வருமான உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 4.5 லட்சமாக உயர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்.

இதை இந்தியாவை முன்னேறாமல் செய்வதற்கான ஒரு தடையாகவே நான் நினைக்கிறேன். வருடம் 4.5 லட்சம் அதாவது மாதம் 37,500 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் எப்படி பின் தங்கியவராக முடியும்?. முதலில் பின் தங்கியவர் என்றால் பொருளாதாரத்திலா, அல்லது ஜாதியிலா எவ்வாறு அதை மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தில் என்றால், மாதம் 37,500 ரூபாய் சம்பளம் வாங்கும் நபர் தன் மகளையோ, மகனையோ ஏன் காசு கொடுத்து படிக்க வைக்க முடியாதா?. இன்றும் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைப் பார்க்கும் கோடானகோடி உயர் ஜாதி (அரசாங்க சட்டத்தில் உள்ளவாறு) மக்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வியே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படாதா?.

இல்லை ஜாதியை மட்டும் பார்த்துத்தான் பின் தங்கியவர் என்று தீர்மானிக்கிறோம் என்று பிற்பட்டோருக்காக பாடுபடும்(?) கலைஞர் போன்றோர் கூறினால், இது ஜாதியை மேன்மேலும் வளர்பதற்காக உதவுமெ தவிர குறைக்காது. இத்தனை சலுகைக் கிடைத்தால் உயர் ஜாதிக்காரன் என்று சொல்லப்படுபவன் தன் ஜாதி வெறியை விட்டாலும், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவன் தன் ஜாதியை விடமாட்டான். மாறாக அவன் அப்படி சொல்வதற்கு பெறுமையடைவான்.

இதியெல்லாம் விட உலகில் முதல் நூறு பல்கலைகழகத்தில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவை கூடிய சீக்கரம் தரமான மாணவர்கள் இல்லாமல் தன் இடத்திலிருந்து கீழறங்கி போகும் என்பது உண்மை.

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

அருண்மொழி said...

//இன்றும் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைப் பார்க்கும் கோடானகோடி உயர் ஜாதி (அரசாங்க சட்டத்தில் உள்ளவாறு) மக்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வியே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படாதா?.//

SUPER கேள்வி இது. ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் கோடானுகோடி உயர்ஜாதி மக்கள்!!!. எந்த நாட்டில், எந்த ஊரில்???

Why cant you recommend to implement the Creamy layer in the OC category. அப்படி செய்தால் இந்த கோடானுகோடி உயர்ஜாதி ஏழைகள் பயன் பெறுவார்களே.

உயர் ஜாதிக்கு Creamy layer கிடையாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு Creamy layer கிடையாது. இடையில் உள்ள BC/OBC மட்டும் Creamy lay ஏன்?

//இதியெல்லாம் விட உலகில் முதல் நூறு பல்கலைகழகத்தில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவை கூடிய சீக்கரம் தரமான மாணவர்கள் இல்லாமல் தன் இடத்திலிருந்து கீழறங்கி போகும் என்பது உண்மை.//

போகட்டுமே. இப்போது மட்டும் இந்த அறிவு ஜீவிகளால் நாட்டிற்கு என்ன நன்மை விளைந்து இருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் கல்வி கூடங்களில் படித்தவர்களின் எத்தனை சதவிகிதம் பேர் இந்தியாவில் தற்போது பணிபுரிகின்றனர் என்று கூற முடியுமா?

தேச‌ப‌க்த‌ன் said...

இதற்கு அரசியல் பிண்ணணி உள்ளது. ஐ.ஐ.டி.யில் காலியாக உள்ள இடங்களை யாருக்கும் பயன் இல்லாமல் போவதற்கு பதிலாக அந்த காலி இடங்களில் பொது ஜாதியினருக்கு கொடுக்க பட வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நமது திராவிட குஞ்சுகளுக்கு தான் இது பிடிக்காதே. விட்டால் பொது ஜாதியினரை நாட்டை விட்டே விரட்டிவிட்டால் தானே இவர்கள் மனது ஆறும்! அதனால் தானே தனியார் துறையிலும் கூட இட ஒதுக்கீடு வேண்டும் என்று குதியாய் குதிக்கிறார்கள்! சரி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி திருத்துவது? உடனே க்ரீமி லேயரின் உச்சவரம்பை உயர்த்து. வோட்டுக்கு வோட்டும் ஆச்சு, தீர்ப்பை மதித்த (?) மாதிரியும் ஆச்சு. இது தான் விஷயம். அப்போது தானே அடுத்த தேர்தலில் வோட்டு கிடைக்கும். நாட்டை பற்றி யார் கவலைப்பட்டார்கள்?

நான் ஆதவன் said...

//Why cant you recommend to implement the Creamy layer in the OC category. அப்படி செய்தால் இந்த கோடானுகோடி உயர்ஜாதி ஏழைகள் பயன் பெறுவார்களே.//

என் வாதமும் அதுதான். க்ரீமிலேயர் என்பது அனைத்து ஜாதிப் பிரிவுக்கும் வேண்டும். அதே நேரத்தில் வருடம் 4.5 லட்சம் வருமானம் வரை நீட்டியிருப்பது மிக அதிகம். அதிக வருமானமுள்ளவர்களை ஒரு பொது பிரிவில் சேர்த்து அவர்க்குள் போட்டியிட வைக்க வேண்டும். மேலும் நான் குறிப்பிட்ட "உயர் ஜாதி" என்ற வார்த்தை அவர்களிலும் ஏழை இருக்கிறார்கள் என்று குறிப்பிடத்தான். வேறு நோக்கமெதுவுமில்லை.

Anonymous said...

இந்த v.p.சிங் & அர்ஜுன் சிங் போன்ற பேமாநிகளை நாடு கடத்தினாலும் தகும்.

Valaipookkal said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

Anonymous said...

THE POINTS WHICH HAS BEEN DISCUSSED AS THE TITLE MESSAGE IS VERY MUCH APPRECIABLE...NEVER BE IMPLEMENTED IN INDIA BECAUSE NO POLITICAL PARTY WILL SUPPORT THIS....HOW THEY WILL GET VOTES..!!! NOT POSSIBLE....!!!!

Related Posts with Thumbnails