சென்னைக்கு வந்த சித்தப்பா!

முதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ போன் செய்து நான் வந்ததை தலைப்புச் செய்தி போல் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அம்மா "டேய் உன்னைப் பார்க்க ஊர்லருந்து உன் சித்தப்பா குழந்தை நாளைக்கு வராரு, போய் மறக்காம கூட்டிட்டு வந்துடு"ன்னு சொன்னாங்க.

சின்ன வயசுலேயே சென்னைக்கு வந்தனால எனக்கு பெரும்பாலும் சொந்தகாரங்கள தெரியாது. எப்பவாவது அம்மாக் கூட ஊருக்கு ஏதாவது கல்யாணத்துக்கு போகும் போது "இவன் தான் சின்னவன் கம்யூட்டர் இன்ஜினியரா இருக்கான்" என்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்தப்படுவேன். உடனே நான் காதில் "அம்மா நான் கம்யூட்டர் இன்ஜினியர் இல்லம்மா"ன்னு சொன்னா "சும்மாயிருடா கம்யூட்டர்ல தான வேலை செய்யிற அப்பறமென்ன"ன்னு சொல்வாங்க. அவுங்கள பொறுத்த வரைக்கும் கம்யூட்டர்ல வேலைப் பார்த்தா கம்யூட்டர் இன்ஜினியர். சொந்தகாரர்களும் முந்தாநேத்து என்னை பார்த்து இரண்டு நாளில் நான் வளர்ந்த மாதிரி "அடேயப்பா எப்படி வளர்ந்துட்டான்"ன்னு பின்னூட்டம் இடுவார்கள்.

சரி விஷயத்துக்கு வரேன். "அம்மா தெளிவா சொல்லு சித்தப்பாவோட குழந்தையா நாளைக்கு வருது"
"டேய் உன் சித்தப்பாதான்டா நாளைக்கு வராரு"
"யாரும்மா அந்த குழந்தை சித்தப்பா?"ன்னு ஏன்டா கேட்டோம்ன்னு ஆயிடுச்சு.
"உங்கப்பாவோட அப்பத்தா இருக்குல்ல அவுங்களோட மூணாவது பையன் தெரியுமா, அதான் உங்கப்பாவோட சித்தப்பா அவரோட சகலையோட நாலாவது பையன் தான் குழந்தை சித்தப்பா"ன்னு முடித்தார்கள். குடும்ப அட்டவணை போட்டு அறிந்துக் கொள்ள நேரமில்லாததால் அக்காவிடம் "யாருக்கா அது" என்று கேட்டேன்.
"என் கல்யாணத்துக்கு வந்து நைட்டு தண்ணியடுச்சுட்டு உபசரிப்பு சரியில்லைன்னு பிரச்சனை செய்யாதாரே அவர் தான்" சொன்னவுடன் எனக்கு எரிச்சலாக வந்தது. அந்தாளு சரியான லொள்ளுப் பிடிச்ச ஆளாச்சே என்று நினைத்துக்கொண்டே அக்காவிடம் "அவர் எதுக்கு இங்க வராரு" என்று கேட்டேன்
"அதான் அம்மா சாட்டிலைட் விட வேகமா நீ வந்ததை மதுரையில இருக்கிற எல்லாருக்கும் சொல்லிட்டாங்களே, அதான் உன்னைப் பார்க்க வராரு"
"ஆமா அதென்ன குழந்தைன்னு பேரு"
"அதுவா சித்தப்பா பொறந்தப்ப மூனடி உயரமும் முப்பது கிலோ வெயிட்டும் இருந்தாரு. வந்து பாத்தவங்கயெல்லாம் "இதுவா குழந்தை"ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க, அதான் தாத்தா அட்லீஸ் பேராவது குழந்தைன்னு வச்சா எல்லாரும் வேற வழியில்லாம குழந்தைன்னு கூப்பிடுவாங்கன்னு அந்த பேரு வச்சாங்க" என்று அக்கா கூறினாள்.
இது உண்மையாக இருக்க சாத்தியமில்லை. அதுமில்லாமல் அக்கா சிரிக்காமல் ஜோக்கடிப்பதில் கில்லாடி. ஆதலால் அதை நான்
நம்பவில்லை. அம்மா மறுபடியும் "டேய் அவர் முன்னபின்ன மெட்ராஸிக்கு வந்ததில்ல அதுனால நாளைக்கு மறக்காம கூட்டிட்டு வந்துடு, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல வராரு" என்று திரும்பவும் ஞாபகப்படுத்தினாள் அம்மா.
"போறேன்" என்று எரிச்சலுடன் வெளியேறினேன்.நண்பர்கள் வற்புறுத்தலுடன் அன்று "காளிகாம்மாள்" ஒயின்ஸில் ஒரு மீட்டிங்கில் இருக்கவேண்டியதானது. குடித்து விட்டு சென்னை பாஷையில் வினோத் இரண்டு மூன்று கவுஜ சொன்னான். ஜாலியாக பொழுது போனது. இரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு சென்றேன்.மட்டையானேன்.
காலையில் யாரோ முகத்தில் தண்ணீரை ஊற்றி என்னை எழுப்பினார்கள். முழுத்துப்பார்த்தால் அக்கா.
எரிச்சலுடன் "என்ன" என்றேன்
"ஹால்ல பாரு சித்தப்பா வந்திருக்காரு" என்றாள்.
"அய்யய்யோ டைம் என்ன? ஏன் என்னை எழுப்பல" என்றேன்
"நீ எங்க எழுந்திருச்ச. நைட்டு தண்ணியடிச்சயா?"
"அம்மாகிட்ட போட்டுக்கொடுத்திட்டயா" என்று கேட்டுக்கொண்டே வெளியில் வந்தேன்.ஹாலில் சித்தப்பா கொஞ்சம் கடுகடுப்புடன் உட்கார்திருந்தார். "வாடா மகனே, துரைக்கு இன்னும் உறக்கம் கலையலயோ"
"இல்லா சித்தப்பா நைட்டு ஆபிஸ் வேலையா ஒரு மீட்டிங், அதான் தூங்க ஒரு மணிக்கு மேல ஆச்சு"
உடனே அம்மா"ஆமா கொழுந்தனாரே, அவன் இங்க லீவுக்கு வந்தாலும் ஆபிஸ்லிருந்து தெனம் அவனை போன் பண்ணி ஏதாவது கேட்டுட்டே இருக்காங்க, இவன கேக்காம எதுவுமே செய்யமாட்டாங்களாம்" என்றாள்.
"அப்படியா அத்தாச்சி" சுரமே இல்லாமல் சித்தப்பா.
சித்தப்பா பின்பு குளிக்க சென்றப் பின்னர் அக்கா சித்தப்பா வீட்டிற்கு வந்த கதையை சொன்ன போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆட்டோகாரன் எக்மோரிலிருந்து தண்டையார்பேட்டை வருவதற்க்கு 200 ரூபாய் கேட்டிருக்கிறான். இவர் தருகிறேன் என்று கூறி ஏறி விட்டு இங்கு வந்ததும் 75 ரூபாய் கொடுத்திருக்கிறார். நியாயமா அவ்வளவு தான் கொடுக்கணும். ஆனா அதுக்கு ஆட்டோகாரன் சட்டைய பிடித்து அடிக்க போய்விட்டான். அதற்குள் அக்கா வந்து சமாதானம் பேசி 125 ரூபாய் கொடுத்தார்களாம்.

இரண்டு நாட்கள் அவரின் அட்டூழியம் சகித்துக்கொண்டுப் போனோம். நைட் ஆகிவிட்டால் தண்ணியடித்துவிட்டுத் தான் வருவார்.ஒருவழியாய் செண்ட், பர்வியூம், எமர்ஜென்சி லைட், சாக்லேட் என எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். நான் தான் வழியனுப்பச் சென்றேன்.
அவர்"மகனே என்னடா இந்த மெட்ராஸ் ஆட்டோ கார பயலுவுக எல்லாம் இம்புட்டு ராங்கித்தனம் செய்யுராக. என்ன பார்த்தா கிராமத்தான் மாதிரியா தெரியுது. சுலுவா கண்டுபுடிச்சுராக. இம்புட்டுக்கும் நான் சூட்கேசு கொண்டாந்திருக்கேன்"
நான்"சித்தப்பா ஆளை பார்த்து மட்டும் யாரும் அப்படி செய்யுறது இல்ல, நாம பேசுறதும் அவுங்களுக்கேத்த மாதிரி பேசனும்"
என்றேன்"அது எப்படினா மகனே" என்றார்.
சரி அவரை ஒரு வழி செய்யலாம் என்று "நீங்க கேக்கறதுனால ஆட்டோகாரன்கிட்ட எப்படி பேசனும்ன்னு சொல்றேன். இப்ப நீங்க என்னை "மகனே மகனே"ன்னு கூப்பிட்றங்கல்ல அது மாதிரி அடிக்கடி "மவனே மவனே" சேர்த்துக்கணும்.
அப்புறம் அதிகமா காசு கேட்டான்னு வச்சுக்கங்க
ஐய "நானே சோன் சோன் பப்பற மிட்டாய்
சிங்கிள் டீ டபுள் ஸ்ட்ராங்
எனக்கே பாப்பின்ஸ் மிட்டாயா"ன்னு சொல்லிட்டு உங்க ரேட்ட சொல்லனும்" என்றேன்.
"மகனே அது என்னாது, ஏதோ சொன்னயே"
"அது தான் கவுஜ"
"சரி அப்பறம்"
"அப்புறம் ரொம்ப ராங்கா எதுவும் பேசி பிரச்சனை செய்தான்னு
வச்சுக்கங்க உடனே
"'டோல் டோலு மா டோலு
மஞ்சா டோலு மஞ்ச மத்தல
மா மத்தல மா டோலு
புளியான் டோலு "ன்னு சொல்லி லெப்ட் உள்ளங்கையில லைட்டா எச்ச துப்பி அவன் நெத்தியில இப்படி தட்டனும்" என்று நான் ஒரு தட்டு தட்ட அவர் கொஞ்சம் ஆடிப்போனார்.
"என்னப்பா இது சித்தப்பன அடிக்குற" என்று கோபமாக,
நான் உஷாராகி,"இல்ல சித்தப்பா இப்படி செய்யனும்ன்னு சொன்னேன், ஒரு விஷயம், மேல சொன்ன கவுஜகளை ரொம்ப வேகமா சொல்லனும். புரிஞ்ச மாதிரியும் இருக்கணும் புரியாத மாதிரியும் இருக்கணும்." என்றேன்.
அவர்"இப்படி சொன்னா ராங்கிதனம் எதுவும் காணிக்க மாட்டானுவுகல" என்று அப்பாவித்தனமாய் கேட்டார். நான் வேகமாக ஆமாம் என தலையை ஆட்டினேன்.
இரயிலில் ஏறும் வரை மனப்பாடம் செய்துக்கொண்டே போனது வீட்டில் அக்காவிடம் சொன்னேன். இரண்டுபேருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலித்தது.

பின்பு ஒரு நாள் ஊருக்கு போய் திரும்பிய அம்மாவை அழைக்க இரயில் நிலையம் போயிருந்தேன். வரும் போது வெளியில் ஒரு ஆட்டோகாரனிடம் ஒரு ஆள் "ஏய் 'நானே சோன் சோன் பப்பர மிட்டாய்'........." என்று கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டப் போது அதிர்ச்சியானேன். இந்த சித்தப்பா ஊரில் இன்னும் எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாரென்று தெரியவில்லை.

டிஸ்கி: 'கவுஜ'கள் உபயம் வினோத். அனைத்தும் "காளிகாம்மாள் ஒயின் ஸ்"ல் வினோத் போதையில் உளறியது. காப்பிரைட்ஸ் எதுவும் கிடையாது. யாரும் எடுத்து உபயோகிக்கலாம்.

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

//அவன் இங்க லீவுக்கு வந்தாலும் ஆபிஸ்லிருந்து தெனம் அவனை போன் பண்ணி ஏதாவது கேட்டுட்டே இருக்காங்க, இவன கேக்காம எதுவுமே செய்யமாட்டாங்களாம்//

aha.. :))))))

sithappu paavam, avara vechi comedy panniteengale

நான் ஆதவன் said...

நன்றி அனானி

அதிஷா said...

நல்லாருக்கு ஆதவன் உங்க அனுபவம் ஹிஹி

செம தமாசு

நான் ஆதவன் said...

வருகைக்கு நன்றி அதிஷா.

வினோத் kumar said...

Dai, na eppa da kaligambal wines ku ponan??adhai na munna pinna ku parthathilla da.. adhuvum "போதையில் உளறியது" vara sollirrukira.. entha uulagam enna yenna nenaikum??? ஆழகான பெண்கள் என்னப்பத்தி என்ன nenaipanga??? அது சரி who is that சித்தப்பா?? na parthey illaiyea!!! anyway very nice post with good comedy.. and i guess u forget "கம்மைல கடுக்க மிட்டைல மிடுக்க "

உலக நண்பர்களே!! இது ஒன்றும் இல்லை we use to tell when our friends try to tease us.. so try to learn as quick as possible and tell to ur friends when they tease u..

\\Aadhavan namma sasi kadhal kadhaiyai நகைச்சுவையாக பதிவாக vayliyeduga\\

நான் ஆதவன் said...

//Dai, na eppa da kaligambal wines ku ponan??adhai na munna pinna ku parthathilla da.. adhuvum "போதையில் உளறியது" vara sollirrukira.. entha uulagam enna yenna nenaikum??? ஆழகான பெண்கள் என்னப்பத்தி என்ன nenaipanga???//

அடப்பாவி "காளிகாம்மாள்" ஒயின்ஸ் உனக்கு தெரியாது???? இதெல்லாம் ஓவர்... ஆமா சொல்லிப்புட்டேன்.
அது சரி உன்ன கேக்காம நாம தண்ணியடுச்சப் பத்தி போட்டதுக்கு ஸாரி மாமு....
and sithappa from madhurai. u haven't seen him.:-)

Related Posts with Thumbnails