வால்.இ-திரைவிமர்சனம்


வால்.இ-திரைவிமர்சனம் (ஆங்கிலம்)
விண்வெளியில் இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனை, மனித உணர்வுகள் உள்ள இயந்திரங்கள் மாற்றி பூமிக்கு அழைத்து வருவது தான் கதை. ஆனால் அதை மனதை வருடும் காதலோடு சொல்லியிருக்கிற விதம் இரண்டு நாட்கள் மனதை விட்டு நீங்காது.


பூமியை வாழவே முடியாத அளவிற்கு குப்பையாக்கி விட்டு விண்வெளியில் ஒரு ஓடத்தில் வசித்து வருகிறது மனித இனம். அந்த குப்பையை சுத்தப் படுத்தும் பணியில் சுமார் எழுநூறு வருடங்களாக ஈடுபட்டுவருகிறது நமது கதாநாயகன் வால்.இ என்கிற ரோபோ. பயம், கோபம், காதல், சந்தோஷம் ஆகிய குணங்கள் உள்ளவனாக நம் மனதை கொள்ளை கொண்டுச் செல்கிறான். குப்பையில் கிடைக்கும் சிறிய சிறிய பொருட்களை ஒரு குழந்தை போலச் சேகரிக்கும் போது நம் மனது என்னவோ போல் ஆகிறது. உடன் இருக்கும் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டு ஐயோ கொன்று விட்டோமோ என்று பதறும் போது நமக்கும் அந்த உணர்வை கொண்டு வருகிறது. டி.வியில் காதல் டூயட்டை பார்த்து ஏக்கத்தோடு வானத்தை பார்ப்பது, தன் கையை தானே கோர்த்து கொள்வது என நம்மை அது ஒரு ரோபோ என்பதை மறக்கச் செய்கிறது. பின்பு ஒரு நாள் பூமியில் வாழ சாத்தியக்கூறு உண்டா என்பதை அறிய "ஈவா" என்கிற பெண் ரோபோ விண்வெளி ஓடத்தில் இருந்து அனுப்பப்ப்டுகிறது. நமது கதாநாயகனுக்கு அவளை கண்டதும் காதல். அவளை தன் பக்கம் ஈர்க்க செய்யும் சேட்டைகள் எல்லாம் நல்ல காமெடி. கடைசியில் அவள் மனமும் மாறும் சமயத்தில் அவள் வந்த வேலை முடிந்து போக வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. பின் தொடர்ந்து செல்லும் நமது கதாநாயகன் காதலியை அடைந்தானா? மனித இனம் மீண்டும் பூமிக்கு திரும்பியதா? என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார்கள்.


கதையெல்லாம் இருக்கட்டும், பூமி இது போல் ஒரு நாள் வாழவே முடியாத அளவிற்கு குப்பைக் காடாக ஆகும் என்பதை நினைக்கும் போதே நம்மை கவலைக் கொள்ளச் செய்கிறது. பூமிக்குள் நுழையும் போது பூமியை சுற்றும் குப்பையாக "சாட்டிலைட்"டை காண்பிப்பது நல்ல காட்சி. பின்னாளில் அன்பு பாசம் ஏன் நடக்கக்கூட மறந்து போகும் மனித இனம் பரிதாபத்துக்குறியது. படம் ஆரம்பித்து 40 நிமிடம் வரை டயலாக்கே இல்லை என்பதே நாம் மறந்து போகிறோம். அந்த அளவிற்கு காட்சியமைப்புகள் நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது(தமிழ் திரையுலகம் கவனிக்க வேண்டிய விசயம்). பின்வரும் காட்சிகளின் டயலாக்கையும் சேர்த்தால் இரண்டு பக்கம் வருமா என்பது சந்தேகமே. க்ளைமாக்ஸில் பழைய நினைவுகள் மறந்த நிலையிம் இருக்கும் வால்.இயை ஈவா மூன்றாம் பிறை ரேஞ்சுக்கு ஒவ்வொன்றாக காண்பித்து ஞாபகப்படுத்துவது நகைச்சுவையுடன்க் கூடிய பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.


மொத்தத்தில் ஒரு நல்ல காதல் கதையோடு எதிர்காலம் பற்றிய பயங்கர உண்மையும் எடுத்துரைக்கும் நல்ல பொழுதுபோக்குப் படம்.

4 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

vinoth kumar said...

I too watched this flim, it is really superb with good entertainment.. moreover the way you commented this film is wonderfull, this shows your involment on this flim after i read your post i realized some hidden truth about this flim.
Great show... keep doing..

நான் ஆதவன் said...

நன்றி வினோத்

வடிவேலன் .ஆர் said...

இந்நாளைக்கு ஏற்ற நல்ல படம்

Srivats said...

Thats a lovely review of the movie :) Its one of my fav movie, I waited for the released and went.

My first time here, thoroughly enjoying ur comedy based writing. Keep them coming

Related Posts with Thumbnails