ஓணம் வாழ்த்துக்கள் (மலையாளிகள் படிக்க வேண்டாம்)

கடந்த நாலைந்து தினமாக என் கம்பெனி கொஞ்சம் குதுகலமாகவே இருந்தது. எல்லாம் ஓணத்தை முன்னிட்டு..எனக்கென்னவோ கடந்த இரண்டு வருடஙக்களை காட்டிலும் கொண்டாட்டம் இந்த வருடம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. காரணம் ரம்ஜான். ஓணம் என்றாலே நினைவுக்கு வருவது 25 வகை சாப்பாடு தான். ஆனால் முஸ்ஸீம் நண்பர்கள் நோன்பு இருக்கும் போது இந்த தடவை தடபுடலாக கொண்டாட வேண்டாம் என்று கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்துல்லது. இல்லையென்றால் அன்று விடுமுறை விட்டு பார்ட்டியெல்லாம் வைத்திருக்கும் என் கம்பெனி. என் கம்பெனியில் வேலை பார்க்கும் 300 பேர்களில் 250க்கும் மேற்பட்டோர் மலையாளிகள். வளைகுடா நாடுகளில் இது சர்வ சாதாரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
சிறு வயதிலேயே மலையாளிகளின் பழகிய அனுபவம் இருந்ததிருக்கிறது. அது பக்கத்து வீட்டு "நிஷா சேச்சி" அம்மாவில் தொடங்கி பின் படிப்பிற்கு பீஸ் கட்ட முடியாத சமயங்களில் தொடர்ந்து உதவிய "முகுந்தன்" சார் வரை எல்லா தொடர்பும் நல்ல முறையில் தான் இருந்தது.சென்னையில் இருந்த வரையில் "மலையாளிகள்" என்ற யாதொரு பிரிவினை எண்ணமும் ஏற்பட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது என் அலுவலகத்திலும் சரி பள்ளி, கல்லூரிகளிலும் சரி வீட்டு அருகினிலும் சரி...... ஏனென்றால் அனைத்து இடங்களிலும் அவர்களின் ஆக்கரமிப்பு என்பது கணிசமாகவே இருந்துள்ளது. நாம் அந்த அளவிற்கு இதையெல்லாம் நினைத்து பார்ப்பதும் இல்லை யோசிப்பதும் இல்லை இது நம் தமிழனின் இயல்பு, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் இயல்பு. நானே இதை இங்கு வந்த பிறகே யோசித்து பார்க்கிறேன். முதன் முறையாக இந்த நிறுவனத்தில் சேரும் போது யாதொரு எண்ணமும் இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் பல மலையாளிகளின் எண்ணம் அதுவாக இல்லை என்பது வந்த கொஞ்ச நாள்களில் அது புலப்பட்டது. முக்கியமாக தமிழன் என்றால் அவர்களுக்கு ஒரு கேவலமான எண்ணம் தான் தோன்றுகிறது. நம்மை நாம் இல்லாத போது "பாண்டி" என்ற பட்ட பெயரிட்டே கிண்டலடிக்கிறார்கள். "பாண்டி" என்பது கெட்ட வார்த்தையில்லையென்றாலும் அந்த வார்த்தையை "தமிழனை" கிண்டலடிக்க உபயோகப்படுத்துகிறார்கள் என்கிற போது நமக்கு சுறுக்கென்று கோபம் வருகிறது. தமிழின் அருமையும், தமிழ்நாட்டின் பெருமைமிக்க வரலாரையும், தமிழரின் தியாக உணர்வையும் தெரியாத கத்துகுட்டிகளின் பேச்சைக் கேட்டு சினமாவதா என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன்.
இந்த அமிரகத்தில் நான் கண்ட மலையாளிகள் சில விஷயங்களில் நமக்கு முன்னே தான் இருக்கிறார்கள், அதில் ஒன்று கல்வி, மற்றொன்று குடிப்பது. உண்மையில் அவர்களை போல் குடிக்க தமிழனால் கண்டிப்பாக முடியாது. தமிழன் அந்த விஷயத்தில் தோற்று போவது நிஜம்.பின்பு அவர்களிடம் காணும் ஒரு வகையான முன்னேறும் திறமை. ஜால்ரா அடித்து முன்னேறுவது அவர்களுக்கு கை வந்த கலை. நமக்கு அது கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் நமக்கு ரோஷம் அதிகம். சுயமரியாதைக்கு இளுக்கு வரும் பட்சத்தில் நம்மால் அங்கே இருக்க முடியாது. இது பெரும்பாலான தமிழனின் கூட பிறந்தது.
மேலும் டி.வியில் மலையாள செய்தி ஒரு தடவை கேட்டால் ஒரு அல்ப விஷயம் தெரியும். அவர்கள் இந்திய அளவில் கொஞ்சம் புகழ் பெற்ற மலையாளிகளின் பெயரை "பறையும் போல்" மலையாளி மலையாளி என்று மூச்சுக்கு முச்சு சொல்வார்கள். உதாரணமாக இந்த வருடம் தேசிய விருது வாங்கிய ப்ரியா மணியை(இத்தனைக்கும் தமிழ் படத்திற்காக) மூச்சுக்கு மூச்சு மலையாளி ப்ரியாமணி என்று சொன்னதை கேட்க சிரிப்பாக இருந்தது(விசாரித்ததில் அம்மணி பாலக்காடாம்) இதே மாதிரி அஞ்சு ஜார்ஜ், முன்னால் குடியரசு தலைவர் நாராயணன் என எல்லோரையும் "விளிப்பார்கள்". எம்.ஜி.ஆர் மலையாளி என்பதை நான் மறந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு சமயத்தில் ஞாபகபடுத்துவார்கள்.
இது இல்லாமல் அரசியல் ரீதியாகவும் பிரச்சனை. கஷ்டப்பட்டு சேலம் கோட்டம் வாங்கினாலும் இன்னும் கன்னியாகுமரியும் திருநெல்வேலியும் "திருவனந்தபுர" கோட்டத்தில் தான் உள்ளது என்று நினைக்கிறேன். அந்த இரயில் நிலையங்களில் பணியாளர்கள் தமிழர்களை விட மலையாளிகளே அதிகம் என்பதாக கேள்வி. அதை எவ்வாறு மீட்க போகிறோமோ தெரியவில்லை.இதை தவிர கோயபுத்தூர் விமான நிலையத்தை "பன்னாட்டு" விமான நிலையமாக மாற்ற சென்னையில் உள்ள மலையாள உயர் அதிகாரி முட்டுக்கட்டை போடுவதை சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகள் சுட்டி காட்டின. ஏனென்றால் "திருவனந்தபுரம்" பன்னாட்டு விமான நிலையம் பாதிக்கப்படுமாம். என்னே கேரளப் பற்று!!!!!!
ஏற்கனவே சோழ நாடு கர்நாடகம் தண்ணீர் தராமல் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. கேரளவத்தரும் தண்ணீர் தரவில்லையென்றால் பாண்டிய நாடும் அதெ கதிதான்.
இதையெல்லாம் மறந்து நாம் பாரத தாயின் பிள்ளைகளாக இருப்பதாலும், இன்னும் கேரளத்திலும் தமிழகத்திலும் வாழும் சில நல்ல உள்ளம் கொண்ட சகோதர சகோதிரிகள் இருப்பதாலும் அவர்களுக்கு என் ஓணம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

30 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

துளசி கோபால் said...

//சுயமரியாதைக்கு இளுக்கு வரும் பட்சத்தில் //

இளுக்கு = இழுக்கு

நான் ஆதவன் said...

நன்றி துளசி கோபால்

Robin said...

மலையாளிகளில் ஒருசில நல்லவர்கள் உண்டு என்றாலும் பெரும்பாலான மலையாளிகளின் மனநிலை நீங்கள் சொல்வதைப்போலவே உள்ளது. தாங்கள் கலாச்சாரத்தில் தமிழர்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் உடையவர்கள். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 'சம்பந்தம்' என்ற ஒரு இழிவான முறையற்ற பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என்பதும் தமிழ்ர்களின் கலாச்சாரம் மலையாளிகளின் கலாச்சாரத்தை விட சிறந்தது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். மேலும் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்த இவர்கள் நம்பூதிரிகளுடன் கொண்ட 'தொடர்பால்' தமிழ்ன் என்ற உணர்வை இழந்துவிட்டார்கள்.

Anonymous said...

மலையாளிங்க அவங்களுக்கு மட்டும் உதவி செஞ்சுப்பாங்க!
ஆனா நம்மாளுங்க?

AMIRDHAVARSHINI AMMA said...

ஒரு மலையாளியின் ஆபிஸில் நீஙகள் வேலை செய்வதே பெரிய விசயம். ஏனெனில் அவர்கள் பொதுவாக அவர்களை சார்ந்தவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

முக்கியமானது. ஒரு மலையாளி இன்னொரு மலையாளியை பார்க்க நேர்ந்தால் அது எப்பேர்ப்பட்ட இடமாக இருந்தாலும் மலையாளத்தில் தான் பறைவார்கள். ஆனால் நம்ம மக்கள் haai hello how r u

நான் ஆதவன் said...

வருகைக்கு நன்றி robin, amirdhavarshini amma

குரங்கு said...

மிகச்சரியா சொல்லிருக்கீங்க... :)

குரங்கு said...

மிகச்சரியா சொல்லிருக்கீங்க...

:)

நான் ஆதவன் said...

நன்றி குரங்கு (என்ன பேர் இது? என்ன தான் மரியாதையா சொன்னாலும் வெளியில தெரியமாட்டேங்குது)

நான் ஆதவன் said...

//மலையாளிங்க அவங்களுக்கு மட்டும் உதவி செஞ்சுப்பாங்க!
ஆனா நம்மாளுங்க?//
அனானி நண்பா நம்மவர்கள் எல்லாருக்கும் உதவி செய்வார்கள். அது தமிழனின் குணம்

முரளிகண்ணன் said...

நயன்,கோபிகா,மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்

Yazh said...

மிக சரியான‌ கணிப்பு

பரிசல்காரன் said...

முரளிகண்ணன் said...

நயன்,கோபிகா,மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்


அவர்களோடு ஷகீலா, ரேஷ்மா, சஜினி, மரியாவுக்கும் வாழ்த்துக்கள்!

கடைசி பக்கம் said...

நீங்கள் சொல்வது மிகச்சரி. என்னுடைய கருத்துடன் நிறைய இடங்களில் ஒத்து போகிறது.

அமிர்தவர்ஷினி சொல்வது மிகச்சரியே.

நான் ஆதவன் said...

//முரளிகண்ணன் said...

நயன்,கோபிகா,மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்

அவர்களோடு ஷகீலா, ரேஷ்மா, சஜினி, மரியாவுக்கும் வாழ்த்துக்கள்!//

சீரியஸான பதிவை இப்படி காமெடி ஆக்கிட்டீங்களே
சரி சரி ஷகீலா, ரேஷ்மா தெரியும் சஜினி, மரியா யாருங்க அவுங்க கலைச் சேவை புரிந்த படங்கள் ஏதாவது........

நான் ஆதவன் said...

நன்றி கடைசிப் பக்கம்

Anonymous said...

We are not just Pandi! We are para Pandi!!!

நல்லதந்தி said...

//மலையாளிங்க அவங்களுக்கு மட்டும் உதவி செஞ்சுப்பாங்க!
ஆனா நம்மாளுங்க?//
அனானி நண்பா நம்மவர்கள் எல்லாருக்கும் உதவி செய்வார்கள். அது தமிழனின் குணம்//
தமிழர்களைத்தவிர அது தமிழனின் குணம் :)

Nithya A.C.Palayam said...

உண்மை…. உண்மை….நீங்கள் சொல்வது மிகச்சரியே.

nawab said...

anna neenga sonnadu sari anna, naanum 15 varushama envanga kuda saudile velai sairen, evanunga kuda jaikanaumna evane ud orupadi mela povanaum, adunale 15 varushama samalikkeran, naama yeppa yenna saivomunu evenugalugu theriya kudadu. appodan polaika mudiyum.

நான் ஆதவன் said...

நமக்கு மட்டுமல்ல நவாப், வளைகுடா நாடுகளில் உள்ள பல தமிழர்களின் நிலை அது தான்..

கருத்துக்கு நன்றி Nithya A.C.Palayam

VSK said...

ஒரு நல்ல நாளில் இப்படி உங்களது காழ்ப்புணர்வைக் காட்டி இருக்க வேண்டாம்!

நான் ஆதவன் said...

//VSK said...
ஒரு நல்ல நாளில் இப்படி உங்களது காழ்ப்புணர்வைக் காட்டி இருக்க வேண்டாம்!//

யாரையும் வேதனைச் செய்ய வேண்டும் என்பது இப்பதிவின் நோக்கமல்ல. நெடுங்காலமாக வளைகுடாவிலும், கேரளத்திலும் தமிழர்கள் படும் வேதனை தமிழ்நாட்டிலுள்ள பல தமிழர்களுக்கு தெரிவதில்லை. அதை தெரிவிப்பதற்காகவே இப்பதிவு.

Anonymous said...

The main cause of their attitude here in gulf or outside kerala, is insecurity. Coz they cant return to their state due to problems like unemployment, communist rule etc.

If u think the otherway, v hav got a lot to learn frm them. Like community/linguistic affiniy, perseverance and fighting spirit. Moreover, they accept watever job offered without complaint and start improving frm thereon.
And most of all their unity is commendable.
The same (unity) is applicable to othr states' natives, except tamilians. U hav more than one tamil in one company, instead of helping and encouraging each other, u will hav all kinds of legpulling among them.

The biggest asset for tamilians is their confidence that they can survive anywhere in the world wothout help, while as 'mallus' need 'mallu' to survive.

nawab said...

yes you are absulutely correct, each an every tamilian is self grown, i myself created my style and name among my collegues, by my bold decissions, this mallus never do anything for the welfare of company , he will be more intrested to take care of his own and community, aaya raam and gaya raam.To fight with I learned malayalam I used to abuse their politicians and their people every day,Because i am watching their tv to harass them. They never talk proud of their state atleast infront me.

Anonymous said...

இது குரங்கு என்பவரின், ரஜினியின் ஒகேனக்கல் நிலைப்பாடும் குசேலன் பல்டி பற்றிய ஒரு பதிவின் டிஸ்கி

//****மொழி என்பது, மனிதன் சிறு குழுக்களாக இருக்கும் போதோ / மற்றவர்களுடன் பேசும் போதே தனக்கு தனித்து வேண்டும் என்று உருவாக்கி கொண்டதுதான் மொழிகள். கன்னடம் & தமிழ், கன்னடக்காரன் & தமிழ்க்காரன் என்ற பாகுபாடை விட்டு, எல்லரும் ஒன்றே என்று இணைவோம், தயவுசெய்து மொழியாலோ இனத்தாலோ பிரச்சனை உண்டக்கதிங்க…

last but not least….
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காணப்தறிவு********/

இங்கே அவரின் நிலை இது மிக்ச்சரி என்பதாகும், ஏன் இந்த முரண்பாடு..

நான் ஆதவன் said...

அனானி நண்பா, "குரங்கின்" அந்த பதிவில் சொல்லியிருப்பது மிகச் சரியே. நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். கன்னடர்கள் நம்மீது வெறுப்பு கொள்வதற்கு சில சொல்லும்படியான காரணங்களை கொண்டு நாம் ஆறுதல் அடையலாம். அதாவது, பெங்களூரில் 50% சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள். கன்னடர்களே அங்கு வாழ்ந்தாலும் தமிழ் தெரியாமல் பிழைப்பது கடினம். தம் மாநிலத்திலேயே இதுப் போன்ற நிலை என்பதும் காரணமாக இருக்கலாம். மேலும் காவிரிப் பிரச்சனை வேறு...... ஆனால் காரணமே இல்லாமல் பல ஆண்டுகளாக நாம் சில மலையாளிகளால் வெறுக்கப்படுவது ஏன் என்பது தான் என் ஆதங்கம். இதைத் தான் "குரங்கு" ஆமோதித்திருப்பதாக நினைக்கிறேன்.
இங்கு பெயரை தெரிவிப்பதினால் பிரச்சனையில்லையென்று நினைக்கிறேன். ஆகவே அனானி பெயர் தேவையா?????

nawab said...

Aadavan sir, Pondy yendral avalgal pandiya mannarkalai ninaithu solgirargal, pandiya mannar kalathis sera naatin mal padayeduthu, pandiya mannargal padayeduth podhu avargal sera nattai yeritthu konde munnerinargal, adanal avargal ippodum nammali pandi yenru paramparambayai kuppidugirargal, andru kubbittadhu bayathal indru kuppiduvadhu yelanamaga, nam makkalum cinema paitiyangal nadigaiku kovil kattuvadu, nadigani parthu daivam yenpadu,yaar sir nammalai madippan.

Robin said...

//nam makkalum cinema paitiyangal nadigaiku kovil kattuvadu, nadigani parthu daivam yenpadu,yaar sir nammalai madippan.//
சரியாகச் சொன்னீர்கள். நாம் கூத்தாடிகளை தலையில் வைத்து ஆடுவது மட்டுமல்லாமல் அவர்களை தேர்தலில் ஜெயிக்க வைத்து நம்மை ஆட்சி செய்யுமளவிற்கு இடம் கொடுத்துவிடுகிறோம். கேரளாவில் எந்த கூத்தாடியும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. மேலும் கேரள அரசியல்வாதிகளிடம் உள்ள எளிமையும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Anonymous said...

ALL TAMILIANS ARE "PANDI PARAYAN" in the dictionary of MALAYALEE ...

So now they call only "PANDI" ... that's all...

Related Posts with Thumbnails