இதுவல்லவோ தாய் பாசம்......(ரிக்சாகாரன் முனியான்டி)

கடந்த ஞாயிற்றுகிழமை நான் கண்ட நிகழ்ச்சி என் நெஞ்சையே கசக்கி பிழிவதாக இருந்தது. மேகக் கருங்கூட்டத்திலிருந்து ஈட்டி போல் வந்த மின்னல் என் நெஞ்சை கிழிப்பது போல் இருந்தது. பூமி மாதா வாய் பிளந்து என்னை முழுங்கி விட்டதா என்று எண்ணினேன். அய்யகோ........ஏய் நிறுத்து

நிறுத்து...ஸ்ஸ்ஸ்ஸப்பா......இப்பவே கண்ண கட்டுதே.....

அட மேட்டரு இன்னான்னா அதாப்பா நம்ம கலைஞர் டி.வியில ஒரு ப்ரொகிராம்பு கீதுல்ல, நம்ம குசுபு ரம்மா மேடம் யெல்லாம் வருவாங்களே அய்ய அதாம்பா "மானாட மயிலாட" கீதுல்ல அதுல ஒரு பொண்ணுப்பா, பேரெல்லாம் நமக்கு இன்னா திரியும், அந்த பொண்ணும் பையனும் இன்னா சூப்பரா ஆட்ச்சு திரியுமா. நா அப்டே மெர்சலாயிட்டேன். நம்ம சாந்தி தியேட்டர் பின்னால ஒரு வீடு கீதுல்ல, அட நா கூட ராவாச்சுன்னா கஸ்டமரு இஸ்துகின்னு பூவேன்ல அங்க நம்ம "ரோசா" ஒரு தம்மா தூண்டு துண்டு கட்டிகின்னு சும்மா இடுப்ப இஸ்துகின்னு சூப்பரா ஆடும்பா, அந்த ரோசாவெ தோத்துபொச்சுப்பா...அதல்லா வுடு, ஆட்னதுக்கு அப்பால ஒன்னு சொல்ச்சுப்பா அந்த பொண்ணு அத கேட்டதுக்கு அப்பால மன்சே அப்டே பீலிங்கா ஆயிச்சுப்பா. அதோட புள்ள ஒன்னு ஆசுபத்திரில கண்ணாடி புட்டில கீதாம். அய்ய உனக்கு யெல்லா டீடெய்லா சொல்னுமா. ஐ.சி.யூல கீதாம். பாவம்பா அந்த பொண்ணு மன்சுல யம்மா பெரிய பேஜார வச்சுகின்னு யன்னா குத்து (டான் ஸ்) குத்துச்சு திரியுமா???ஆடி முட்ச்சுட்டு நம்ம கலா மேடத்துகிட்ட அய்துன்னே சொன்னதுக்கு அப்பால மேடம் அப்டியே ஆடிபூச்சு. அந்த பாட்ட குயந்த வச்சுகின்ன அம்மாகெல்லாம் ஏதோ டெடிகேஷனாமே அது பண்ணுச்சு. நைட்டு குவார்டரு ராவா அட்ச்சும் தூக்கம் வர்ல திரியுமா. ஒரே மதர் சென்டிமென்டுபா. இப்டி தான் ஒருவாட்டி எனக்கு அப்போ ஒரு 6 வய்சு இருக்கும்பா எனக்கு ஒரெ வயுத்தாலயா போச்சு எல்லாரும் இது பூட்ட கேசுன்னு சொன்னாங்க. எங்கம்மா அப்பொ ரிக்கார்டு டான்சு ஆடும். அதுக்கு கூட போவாத என் பக்கத்திலேயெ கெடக்கும். அப்பறம் முனீஸ்வரன் தயவால பொழச்சேன். அதுக்கு அப்பால என் பேரு முனியான்டின்னு வச்சுது. அந்த பீலிங் தாம்பா ரெண்டு நாளா தூக்கமே வர்ல......

2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

vinoth kumar said...

மாப்ள ஆதவன் கு வணக்கம் வேக்கிறான் பா.. , நான்தான் வண்ணாரபேட்டை வினோத்... இன சவூகியமா?? சும்மா குப்பைத்தொட்டி ய பாக்கலாம் னு வந்தான்... சும்மா சொல்ல கூடாது சொக்க கிது மா ... குப்பைத்தொட்டி ல அடிச்சிருக்கிற கலறு சூப்பர் போ... over all உள்ள இருக்குற மேட்டர் அகின் சுபெரோ சூப்பர்...
I wish all success for this blog.. keep up the good work.. try to post various news and updates... if you found any mistake in above tamil comments, excuse me :( for me it took 30 min to type this comments in tamil:( anyway see u again in next post..

நான் ஆதவன் said...

டாங்ஸ் மச்சி

Related Posts with Thumbnails