ட்ரிங் ட்ரிங்...ட்ரிங் ட்ரிங்.....(ஏதாவது செய்யனும் பாஸ்)

ட்ரிங் ட்ரிங்...ட்ரிங் ட்ரிங்.....
நான்:"ஹலோ"
நண்பன்:"மச்சி நான் தான்டா"
நா:"சொல்ட்ரா மச்சி எப்டி இருக்க?"
ந:"நல்லாயிருக்கேன் உன் வலைபதிவுயெல்லாம் எப்டி போகுது"
"எதோ போய்ட்டுயிருக்குடா, கொஞ்சம் பேரு இப்பதான் படிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்"
"சரி எல்லாம் கொஞ்ச நாள்ல பிக்கப் ஆயிடும். ஏய் உன்னை யோரோ கூப்பிடுற மாதிரி இருக்கு?"
"ஆமாடா கொஞ்சம் வெயிட் பண்ணு............"
சிறிது நேரம் கழித்து
நண்பன்: "யாருடா அது?"
நான்:"பக்கத்து வீட்டு 'நாடாரம்மா'டா. அவுங்க வீட்டு சாவி வந்து வாங்கிட்டு போனாங்க"
"என்னது நாடாரம்மாவா? அவுங்க பேரே அதுதானா?"
"இல்லன்னு நினைக்கிறேன். ஆனா ஒர்ஜினல் பேரு தெரியாது. எல்லாரும் இப்படி தான் கூப்பிடுவாங்க. ஏன் அத கேக்கிற"
"இல்ல.. இந்த ஜாதி பேரு வச்சு கூப்பிட்றத எப்ப நிறுத்த போரீங்கன்னு தெரியல"
"ஏன் அதிலென்ன தப்பு. ஜாதி இல்லாம எப்படி இருக்க முடியும். எங்க ஊர்லயெல்லாம் ஜாதிக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுப்போம் தெரியுமா!. "
"கிழுஞ்சுது!!! ஏண்டா படிச்ச நீயே ஜாதிக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கலாமா"
"ஏன்டா அப்புறம் ஜாதியே வேண்டாம்ன்னு சொல்றயா? எப்படிடா? என் ஜாதிக்கு எத்தனை சலுகை இருக்கு தெரியுமா? இடஒதிக்கீடு மூலமா ஈஸியா கவர்மென்ட் ஜாப் வாங்கிடலாம். ஏன்னா எங்க ஊரு எம்.எல்.ஏ எங்க ஜாதிதான் தெரியுமா. நாங்கெல்லாம் சேர்ந்த்து தான் அவரை எம்.எல்.ஏ ஆக்குனோம்."
"அடப்பாவி உங்கள மாதிரி முட்டாலுங்கள திருத்தவே முடியாது இடஒதிக்கீடு ஒன்னு இருக்குற வர கீழ் தட்டு மக்கள் முன்னுக்கு வரவே முடியாது. டேய் மச்சான் பள்ளத்தில இருக்கிறவனக்கு கயிறு போட்டு மேல தூக்கனுமே தவிர அவனுக்கு சாப்பாடு தண்ணி எல்லாம் பிச்சை போடுற மாதிரி கொடுத்து அவனை அங்கையே இருக்க சொன்னா அவன் உயிர் வாழ்ந்து அர்த்தமே இல்ல. அதுக்கு சாதியை வேரோடு பிடுங்கணும்"
"அது சரி இவ்ளோ பேசுருயே சாதியை வேரோடு புடுங்க நீயே ஒரு ஐடியா சொல்லேன்?"
"என்னடா செடியை வேரோடு புடுங்கற மாதிரி உடனே புடுங்க சொல்ற. இருந்தாலும் என் சின்ன மூளைல இருக்கிற ஒரு ஐடியாவ சொல்றேன். இதை உடனே சரி செய்ய முடியாது உன்ன, என்ன மாதிரி இளைஞர்கள் மனசு வச்சா எதிர்காலத்துல இது கண்டிப்பா முடியும். இப்ப இதுவரை போனது போகட்டும் இனி சாதியினால வரக்கூடிய சலுகைகள் எல்லாத்தையும் மறுக்கணும். நம்முடைய குழந்தைகளுக்கு ஜாதின்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு சின்ன வயசிலயே சொல்லி கொடுக்கணும். பள்ளி கல்லூரிகளில் சேர்க்கும் போது ஜாதியை கேட்டு வற்புருத்த கூடாதுன்னு நீதிமன்றமே அறிவுரித்தியிருக்கிறது. நாம இதை செயல்படுத்துவோம் நம்மள பார்த்து ஒருத்தராவது மாறுவாங்க. அந்த ஒருத்தரை பார்த்து இன்னொருத்தர் இது இப்படியே தொடரும். மேலும் அரசாங்க வேலைக்கு அப்ளே செய்யும் போது 'அதர்ஸ்'ன்னு ஒரு பகுதி இருக்கும் அதில் அப்ளே செய்வோம். நாளடைவில் அந்த அதர்ஸ் பகுதியை அரசாங்கம் கொஞ்சம் அதிகரிக்கும். மற்ற பகுதியை தானாக குறைக்கும். ஆனா நாம எடுத்த முடிவுல உறுதியா இருக்கணும். ."
"சரிடா நீ சொல்றது நமக்கு ஓகே ஆனா கிராமத்துல கீழ் சாதின்னு அரசாங்கமும், மற்ற சாதிக்காரங்களும் சொல்லி ஒதுக்கி வச்சிருக்கிற ஆளுங்க என்ன செய்வாங்க?"
"நான் மேலே சொன்னதெல்லாம் நாம செய்ய வேண்டியது. நம்ம கல்வி முறை உலகத்திலேயே வேற எந்த நாட்டிலேயும் இல்லாத கேவலமான முறை அது பாடத்திட்டத்திலேயும் சரி இடஒதிக்கீட்லேயும் சரி. மேல சொன்னத நாம கொஞ்சம் கொஞ்சமா நிறைவேத்தும் போது அரசாங்கம் ஜாதி ஒதிக்கீட்டை கிராமபுற மாணவர்கள் இடஒதிக்கீடுன்னு தனியா கொடுக்கலாம். அதுவும் சமமான கல்வி எல்லாருக்கும் கிடைக்கும் வரை மட்டும். எப்போ கிராமபுற மாணவர்கள் தேர்ச்சி விகிதம் படிப்படியா அதிகரிக்குமோ அப்போ அந்த ஒதிக்கீடையும் படிப்படியா எடுத்திடலாம். ஏன்னா அப்போ எல்லாருக்கும் சமகல்வி கிடைக்குதுன்னு அர்த்தம்"
நா: "மச்சி ஒரு ஐடியா! பேசாம "ஜாதி இல்லாதவர் சங்கம்"ன்னு ஒரு கட்சி ஆரபிக்கலாம். அதுல நம்மல மாதிரி இளைஞர்களை மட்டும் சேர்த்துப்போம். உறுப்பினர்கள் நிறைய பேர் சேர்ந்திட்ட பிறகு நமக்கு இத்தனை சதவிகிதம் இடஒதிக்கீடு வேணும்ன்னு போராட்டம் எல்லாம் செய்யலாம். பின்னால ஆட்சியை கூட கைப்பற்றலாம்."
"உன் வாயில தீயை வச்சு கொளுத்த...ஏற்கனவே கடவுள் இல்லன்னு சொன்ன ஒரு கும்பல் பின்னால ஆட்சியை பிடுச்சு அந்த கடவுள வச்சே அரசியல் செய்யுது. இதுல, அதுவும் நீ கட்சி ஆரபிச்சா அந்த ஜாதியை வச்சே அரசியல் செய்வ....மச்சி நான் மறுபடியும் சொல்றேன் கேளு நாம சரியா இருந்தோம்ன்னா அரசாங்கம் நமக்கு நல்லதே செய்யும். எல்லாம் நம்மகிட்டதான் இருக்கு"
"அப்ப நீ உன் சந்ததியினருக்கு ஜாதியினால எந்த சலுகையும் வாங்கி கொடுக்க மாட்டேன்னு சொல்லு"
"சத்தியமா. நான் முடிவு எடுத்துட்டேன். என்னை பார்த்து ஒருத்தர் முடிவுயெடுத்தாலும் இன்னும் இருபது முப்பது வருஷத்துல கண்டிப்பா ஒரு மாறுதல் வரும். ஏன்னா "ஏதவாது செய்யனுமே" மச்சி."
"மச்சி நீ சொன்னத வச்சு பாக்கும்போது எனக்கும் "ஏதாவது செய்யனும்" போல இருக்கு. இத பத்தி நாம டீடெய்லா பேசுவாம் சாய்ங்காலம் "நாயர்" டீ கடைக்கு வந்துடு"
"உன்ன திருத்தவே முடியாது, போன வச்சு தொல"
டொக்.
தொடரும்.....

5 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல கருத்தை தான் கூறியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.


2 தலைமுறைகளாக இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்தவர்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறைக்கு கட்டாயம் இட ஒதுக்கீட்டின் பயன் இருக்க கூடாது. அவர்களை சாதியற்றவர்களாக்கி விடலாம். அப்படி செய்தால் வளர்ச்சியடைந்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்து கொண்டே இருப்பதை தவிர்கலாம். ஆனால் சாதியை வைத்தே அரசியல் நடத்த நினைக்கும் நம் அரசியல்வாதிகள் எப்படி இதற்கு ஒத்துக்கொள்வார்கள்?

Lakshmi said...

என்னதான் சொன்னாலும் , பலருக்கு சாதி பிடிப்பதில்லை. சலுகைக்காகத்தான் பலரும் சாதியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறார்கள். கலப்பு திருமணங்கள் தான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். தற்போதைய நடைமுறையில் மாறுதல் கொண்டு வர வேண்டும்.

தற்போது தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்பவரின் அடுத்த தலைமுறை சலுகைகளுக்காக தாழ்த்தப்பட்ட ஜாதியில் சேர்ந்து கொள்ளுகிறது. அப்போது ஜாதி ஒழிவதில்லை. அடுத்த சமூகம் சலுகைக்காக மற்றொரு ஜாதியில் தஞ்சம் புகுகிறது. இது மாற வேண்டும்.

கலப்பு மணம் புரிபவர்களை எந்த ஜாதியையும் சேராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும். அவர்களுக்கென்று ஒரு பிரிவு உண்டாக்க வேண்டும். அவர்களுக்கு SC/ST பிரிவிற்கு உள்ள எல்லா சலுகைகளும் அளிக்க வேண்டும். சாதி தேவை இல்லை என்று நினைப்பவன் கலப்பு மணம் புரிந்து "சாதி இல்லாதோர் " பிரிவில் சேர்ந்து சலுகைகளை அனுபவித்து கொண்டு போகிறான். இதன் மூலம் பல சாதிகள் இணைந்து சாதி இல்லா புதிய் சமுதாயம் உருவாகும். இது கலப்பு மனம் புரிவோரை ஊக்குவிப்பதாகவும் அமையும்

நான் ஆதவன் said...

சரியாக சொன்னீர்கள் ஜோசப் பால்ராஜ். மற்றவர்களை கூறி இனி பயனில்லை.
நாம் மாறுவோம் மற்றவர்கள் தானாக மாறுவார்கள்

கருத்துக்கு நன்றி லஷ்மி.

வித்யா said...

சூப்பர்:))

Related Posts with Thumbnails