மற்றவர்களுக்கு தெரியாமல் இன்டெர்நெட் உபயோகிப்பது எப்படி?

அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி சில நேரங்களில் கணினியில் இன்டெர்நெட் உபயோகிப்பதோ அல்லது வேறு ஏதாவது டவுன்லோட் செய்வதோ யாருக்கும் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் நினைப்பதுண்டு. கஷ்டப்பட்டு டைப் செய்துக் கொண்டிருக்கும் போது ஆபிஸில் முக்கியமானவர் திடீர் வரவால் அதை மூட வேண்டியிருக்கும்.

அந்த குறையைப் போக்குவதற்குத்தான் இந்த டபுள் டெஸ்க்டாப் சாப்ட்வேர். இதை இறக்க இங்கே சொடுக்கவும்.முதலில் அதை இன்ஸ்டால் செய்யவும். பின்பு டெஸ்க்டாப்பின் வலது கீழ் ஓரத்தில் படத்தில் உள்ள சிம்பெள் காணப்படும். அதை க்ளிக் செய்தால் உங்களை அடுத்த டெஸ்க்டாப்பிற்கு அழைத்துச் செல்லும். அங்கு நீங்கள் உங்கள் விருப்பமானவற்றை உபயோகிக்கலாம். திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மறுபடியும் அதே சிம்பளை க்ளிக் செய்யவும். தேவைப்படும் போது அங்கு சென்று உங்கள் விருப்பமானவற்றை பயன்படுத்தலாம், எதையும் க்ளோஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதை சில ஷார்ட் கட் கீ உபயோகித்தும் பயன்படுத்தலாம். அதே சிம்பளை ரைட் கிளிக் செய்து "ஆப்சனில்" உங்களுக்கு மிகவும் எளிதாக உள்ள கீயை தேர்வு செய்யவும்.


உதாரனத்திற்கு ஆல்ட்+ஸ்பேஸ் தேர்வு செய்தால், இரண்டு கீயும் அடுத்தடுத்து இருப்பதினால் வேகமாக மாற்ற உதவும்.எல்லாரும் ஆபிஸில் தொடர்ந்து தடையில்லாம பதிவெழுதி கலக்க ஏதோ நம்மலால முடிஞ்ச சின்ன உதவி(நீ இருக்கிற ஆபிஸ் உருப்பட்டாப்பல தான் !நீங்க சொல்றது எனக்கு கேக்குது).:-))))

உபயம்:வினோத் (திட்றதா இருந்தா இவனை திட்டுங்க... ஆனா பாராட்டுறதா இருந்தா மட்டும் என்னை பாராட்டுங்க)
இது போனஸ். ரோபோ படங்கள்.....சென்னைக்கு வந்த சித்தப்பா!

முதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ போன் செய்து நான் வந்ததை தலைப்புச் செய்தி போல் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அம்மா "டேய் உன்னைப் பார்க்க ஊர்லருந்து உன் சித்தப்பா குழந்தை நாளைக்கு வராரு, போய் மறக்காம கூட்டிட்டு வந்துடு"ன்னு சொன்னாங்க.

சின்ன வயசுலேயே சென்னைக்கு வந்தனால எனக்கு பெரும்பாலும் சொந்தகாரங்கள தெரியாது. எப்பவாவது அம்மாக் கூட ஊருக்கு ஏதாவது கல்யாணத்துக்கு போகும் போது "இவன் தான் சின்னவன் கம்யூட்டர் இன்ஜினியரா இருக்கான்" என்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்தப்படுவேன். உடனே நான் காதில் "அம்மா நான் கம்யூட்டர் இன்ஜினியர் இல்லம்மா"ன்னு சொன்னா "சும்மாயிருடா கம்யூட்டர்ல தான வேலை செய்யிற அப்பறமென்ன"ன்னு சொல்வாங்க. அவுங்கள பொறுத்த வரைக்கும் கம்யூட்டர்ல வேலைப் பார்த்தா கம்யூட்டர் இன்ஜினியர். சொந்தகாரர்களும் முந்தாநேத்து என்னை பார்த்து இரண்டு நாளில் நான் வளர்ந்த மாதிரி "அடேயப்பா எப்படி வளர்ந்துட்டான்"ன்னு பின்னூட்டம் இடுவார்கள்.

சரி விஷயத்துக்கு வரேன். "அம்மா தெளிவா சொல்லு சித்தப்பாவோட குழந்தையா நாளைக்கு வருது"
"டேய் உன் சித்தப்பாதான்டா நாளைக்கு வராரு"
"யாரும்மா அந்த குழந்தை சித்தப்பா?"ன்னு ஏன்டா கேட்டோம்ன்னு ஆயிடுச்சு.
"உங்கப்பாவோட அப்பத்தா இருக்குல்ல அவுங்களோட மூணாவது பையன் தெரியுமா, அதான் உங்கப்பாவோட சித்தப்பா அவரோட சகலையோட நாலாவது பையன் தான் குழந்தை சித்தப்பா"ன்னு முடித்தார்கள். குடும்ப அட்டவணை போட்டு அறிந்துக் கொள்ள நேரமில்லாததால் அக்காவிடம் "யாருக்கா அது" என்று கேட்டேன்.
"என் கல்யாணத்துக்கு வந்து நைட்டு தண்ணியடுச்சுட்டு உபசரிப்பு சரியில்லைன்னு பிரச்சனை செய்யாதாரே அவர் தான்" சொன்னவுடன் எனக்கு எரிச்சலாக வந்தது. அந்தாளு சரியான லொள்ளுப் பிடிச்ச ஆளாச்சே என்று நினைத்துக்கொண்டே அக்காவிடம் "அவர் எதுக்கு இங்க வராரு" என்று கேட்டேன்
"அதான் அம்மா சாட்டிலைட் விட வேகமா நீ வந்ததை மதுரையில இருக்கிற எல்லாருக்கும் சொல்லிட்டாங்களே, அதான் உன்னைப் பார்க்க வராரு"
"ஆமா அதென்ன குழந்தைன்னு பேரு"
"அதுவா சித்தப்பா பொறந்தப்ப மூனடி உயரமும் முப்பது கிலோ வெயிட்டும் இருந்தாரு. வந்து பாத்தவங்கயெல்லாம் "இதுவா குழந்தை"ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க, அதான் தாத்தா அட்லீஸ் பேராவது குழந்தைன்னு வச்சா எல்லாரும் வேற வழியில்லாம குழந்தைன்னு கூப்பிடுவாங்கன்னு அந்த பேரு வச்சாங்க" என்று அக்கா கூறினாள்.
இது உண்மையாக இருக்க சாத்தியமில்லை. அதுமில்லாமல் அக்கா சிரிக்காமல் ஜோக்கடிப்பதில் கில்லாடி. ஆதலால் அதை நான்
நம்பவில்லை. அம்மா மறுபடியும் "டேய் அவர் முன்னபின்ன மெட்ராஸிக்கு வந்ததில்ல அதுனால நாளைக்கு மறக்காம கூட்டிட்டு வந்துடு, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல வராரு" என்று திரும்பவும் ஞாபகப்படுத்தினாள் அம்மா.
"போறேன்" என்று எரிச்சலுடன் வெளியேறினேன்.நண்பர்கள் வற்புறுத்தலுடன் அன்று "காளிகாம்மாள்" ஒயின்ஸில் ஒரு மீட்டிங்கில் இருக்கவேண்டியதானது. குடித்து விட்டு சென்னை பாஷையில் வினோத் இரண்டு மூன்று கவுஜ சொன்னான். ஜாலியாக பொழுது போனது. இரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு சென்றேன்.மட்டையானேன்.
காலையில் யாரோ முகத்தில் தண்ணீரை ஊற்றி என்னை எழுப்பினார்கள். முழுத்துப்பார்த்தால் அக்கா.
எரிச்சலுடன் "என்ன" என்றேன்
"ஹால்ல பாரு சித்தப்பா வந்திருக்காரு" என்றாள்.
"அய்யய்யோ டைம் என்ன? ஏன் என்னை எழுப்பல" என்றேன்
"நீ எங்க எழுந்திருச்ச. நைட்டு தண்ணியடிச்சயா?"
"அம்மாகிட்ட போட்டுக்கொடுத்திட்டயா" என்று கேட்டுக்கொண்டே வெளியில் வந்தேன்.ஹாலில் சித்தப்பா கொஞ்சம் கடுகடுப்புடன் உட்கார்திருந்தார். "வாடா மகனே, துரைக்கு இன்னும் உறக்கம் கலையலயோ"
"இல்லா சித்தப்பா நைட்டு ஆபிஸ் வேலையா ஒரு மீட்டிங், அதான் தூங்க ஒரு மணிக்கு மேல ஆச்சு"
உடனே அம்மா"ஆமா கொழுந்தனாரே, அவன் இங்க லீவுக்கு வந்தாலும் ஆபிஸ்லிருந்து தெனம் அவனை போன் பண்ணி ஏதாவது கேட்டுட்டே இருக்காங்க, இவன கேக்காம எதுவுமே செய்யமாட்டாங்களாம்" என்றாள்.
"அப்படியா அத்தாச்சி" சுரமே இல்லாமல் சித்தப்பா.
சித்தப்பா பின்பு குளிக்க சென்றப் பின்னர் அக்கா சித்தப்பா வீட்டிற்கு வந்த கதையை சொன்ன போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆட்டோகாரன் எக்மோரிலிருந்து தண்டையார்பேட்டை வருவதற்க்கு 200 ரூபாய் கேட்டிருக்கிறான். இவர் தருகிறேன் என்று கூறி ஏறி விட்டு இங்கு வந்ததும் 75 ரூபாய் கொடுத்திருக்கிறார். நியாயமா அவ்வளவு தான் கொடுக்கணும். ஆனா அதுக்கு ஆட்டோகாரன் சட்டைய பிடித்து அடிக்க போய்விட்டான். அதற்குள் அக்கா வந்து சமாதானம் பேசி 125 ரூபாய் கொடுத்தார்களாம்.

இரண்டு நாட்கள் அவரின் அட்டூழியம் சகித்துக்கொண்டுப் போனோம். நைட் ஆகிவிட்டால் தண்ணியடித்துவிட்டுத் தான் வருவார்.ஒருவழியாய் செண்ட், பர்வியூம், எமர்ஜென்சி லைட், சாக்லேட் என எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். நான் தான் வழியனுப்பச் சென்றேன்.
அவர்"மகனே என்னடா இந்த மெட்ராஸ் ஆட்டோ கார பயலுவுக எல்லாம் இம்புட்டு ராங்கித்தனம் செய்யுராக. என்ன பார்த்தா கிராமத்தான் மாதிரியா தெரியுது. சுலுவா கண்டுபுடிச்சுராக. இம்புட்டுக்கும் நான் சூட்கேசு கொண்டாந்திருக்கேன்"
நான்"சித்தப்பா ஆளை பார்த்து மட்டும் யாரும் அப்படி செய்யுறது இல்ல, நாம பேசுறதும் அவுங்களுக்கேத்த மாதிரி பேசனும்"
என்றேன்"அது எப்படினா மகனே" என்றார்.
சரி அவரை ஒரு வழி செய்யலாம் என்று "நீங்க கேக்கறதுனால ஆட்டோகாரன்கிட்ட எப்படி பேசனும்ன்னு சொல்றேன். இப்ப நீங்க என்னை "மகனே மகனே"ன்னு கூப்பிட்றங்கல்ல அது மாதிரி அடிக்கடி "மவனே மவனே" சேர்த்துக்கணும்.
அப்புறம் அதிகமா காசு கேட்டான்னு வச்சுக்கங்க
ஐய "நானே சோன் சோன் பப்பற மிட்டாய்
சிங்கிள் டீ டபுள் ஸ்ட்ராங்
எனக்கே பாப்பின்ஸ் மிட்டாயா"ன்னு சொல்லிட்டு உங்க ரேட்ட சொல்லனும்" என்றேன்.
"மகனே அது என்னாது, ஏதோ சொன்னயே"
"அது தான் கவுஜ"
"சரி அப்பறம்"
"அப்புறம் ரொம்ப ராங்கா எதுவும் பேசி பிரச்சனை செய்தான்னு
வச்சுக்கங்க உடனே
"'டோல் டோலு மா டோலு
மஞ்சா டோலு மஞ்ச மத்தல
மா மத்தல மா டோலு
புளியான் டோலு "ன்னு சொல்லி லெப்ட் உள்ளங்கையில லைட்டா எச்ச துப்பி அவன் நெத்தியில இப்படி தட்டனும்" என்று நான் ஒரு தட்டு தட்ட அவர் கொஞ்சம் ஆடிப்போனார்.
"என்னப்பா இது சித்தப்பன அடிக்குற" என்று கோபமாக,
நான் உஷாராகி,"இல்ல சித்தப்பா இப்படி செய்யனும்ன்னு சொன்னேன், ஒரு விஷயம், மேல சொன்ன கவுஜகளை ரொம்ப வேகமா சொல்லனும். புரிஞ்ச மாதிரியும் இருக்கணும் புரியாத மாதிரியும் இருக்கணும்." என்றேன்.
அவர்"இப்படி சொன்னா ராங்கிதனம் எதுவும் காணிக்க மாட்டானுவுகல" என்று அப்பாவித்தனமாய் கேட்டார். நான் வேகமாக ஆமாம் என தலையை ஆட்டினேன்.
இரயிலில் ஏறும் வரை மனப்பாடம் செய்துக்கொண்டே போனது வீட்டில் அக்காவிடம் சொன்னேன். இரண்டுபேருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலித்தது.

பின்பு ஒரு நாள் ஊருக்கு போய் திரும்பிய அம்மாவை அழைக்க இரயில் நிலையம் போயிருந்தேன். வரும் போது வெளியில் ஒரு ஆட்டோகாரனிடம் ஒரு ஆள் "ஏய் 'நானே சோன் சோன் பப்பர மிட்டாய்'........." என்று கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டப் போது அதிர்ச்சியானேன். இந்த சித்தப்பா ஊரில் இன்னும் எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாரென்று தெரியவில்லை.

டிஸ்கி: 'கவுஜ'கள் உபயம் வினோத். அனைத்தும் "காளிகாம்மாள் ஒயின் ஸ்"ல் வினோத் போதையில் உளறியது. காப்பிரைட்ஸ் எதுவும் கிடையாது. யாரும் எடுத்து உபயோகிக்கலாம்.

நிலவோடு விளையாடலாம்!

வால்.இ-திரைவிமர்சனம்


வால்.இ-திரைவிமர்சனம் (ஆங்கிலம்)
விண்வெளியில் இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனை, மனித உணர்வுகள் உள்ள இயந்திரங்கள் மாற்றி பூமிக்கு அழைத்து வருவது தான் கதை. ஆனால் அதை மனதை வருடும் காதலோடு சொல்லியிருக்கிற விதம் இரண்டு நாட்கள் மனதை விட்டு நீங்காது.


பூமியை வாழவே முடியாத அளவிற்கு குப்பையாக்கி விட்டு விண்வெளியில் ஒரு ஓடத்தில் வசித்து வருகிறது மனித இனம். அந்த குப்பையை சுத்தப் படுத்தும் பணியில் சுமார் எழுநூறு வருடங்களாக ஈடுபட்டுவருகிறது நமது கதாநாயகன் வால்.இ என்கிற ரோபோ. பயம், கோபம், காதல், சந்தோஷம் ஆகிய குணங்கள் உள்ளவனாக நம் மனதை கொள்ளை கொண்டுச் செல்கிறான். குப்பையில் கிடைக்கும் சிறிய சிறிய பொருட்களை ஒரு குழந்தை போலச் சேகரிக்கும் போது நம் மனது என்னவோ போல் ஆகிறது. உடன் இருக்கும் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டு ஐயோ கொன்று விட்டோமோ என்று பதறும் போது நமக்கும் அந்த உணர்வை கொண்டு வருகிறது. டி.வியில் காதல் டூயட்டை பார்த்து ஏக்கத்தோடு வானத்தை பார்ப்பது, தன் கையை தானே கோர்த்து கொள்வது என நம்மை அது ஒரு ரோபோ என்பதை மறக்கச் செய்கிறது. பின்பு ஒரு நாள் பூமியில் வாழ சாத்தியக்கூறு உண்டா என்பதை அறிய "ஈவா" என்கிற பெண் ரோபோ விண்வெளி ஓடத்தில் இருந்து அனுப்பப்ப்டுகிறது. நமது கதாநாயகனுக்கு அவளை கண்டதும் காதல். அவளை தன் பக்கம் ஈர்க்க செய்யும் சேட்டைகள் எல்லாம் நல்ல காமெடி. கடைசியில் அவள் மனமும் மாறும் சமயத்தில் அவள் வந்த வேலை முடிந்து போக வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. பின் தொடர்ந்து செல்லும் நமது கதாநாயகன் காதலியை அடைந்தானா? மனித இனம் மீண்டும் பூமிக்கு திரும்பியதா? என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார்கள்.


கதையெல்லாம் இருக்கட்டும், பூமி இது போல் ஒரு நாள் வாழவே முடியாத அளவிற்கு குப்பைக் காடாக ஆகும் என்பதை நினைக்கும் போதே நம்மை கவலைக் கொள்ளச் செய்கிறது. பூமிக்குள் நுழையும் போது பூமியை சுற்றும் குப்பையாக "சாட்டிலைட்"டை காண்பிப்பது நல்ல காட்சி. பின்னாளில் அன்பு பாசம் ஏன் நடக்கக்கூட மறந்து போகும் மனித இனம் பரிதாபத்துக்குறியது. படம் ஆரம்பித்து 40 நிமிடம் வரை டயலாக்கே இல்லை என்பதே நாம் மறந்து போகிறோம். அந்த அளவிற்கு காட்சியமைப்புகள் நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது(தமிழ் திரையுலகம் கவனிக்க வேண்டிய விசயம்). பின்வரும் காட்சிகளின் டயலாக்கையும் சேர்த்தால் இரண்டு பக்கம் வருமா என்பது சந்தேகமே. க்ளைமாக்ஸில் பழைய நினைவுகள் மறந்த நிலையிம் இருக்கும் வால்.இயை ஈவா மூன்றாம் பிறை ரேஞ்சுக்கு ஒவ்வொன்றாக காண்பித்து ஞாபகப்படுத்துவது நகைச்சுவையுடன்க் கூடிய பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.


மொத்தத்தில் ஒரு நல்ல காதல் கதையோடு எதிர்காலம் பற்றிய பயங்கர உண்மையும் எடுத்துரைக்கும் நல்ல பொழுதுபோக்குப் படம்.

ஓணம் வாழ்த்துக்கள் (மலையாளிகள் படிக்க வேண்டாம்)

கடந்த நாலைந்து தினமாக என் கம்பெனி கொஞ்சம் குதுகலமாகவே இருந்தது. எல்லாம் ஓணத்தை முன்னிட்டு..எனக்கென்னவோ கடந்த இரண்டு வருடஙக்களை காட்டிலும் கொண்டாட்டம் இந்த வருடம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. காரணம் ரம்ஜான். ஓணம் என்றாலே நினைவுக்கு வருவது 25 வகை சாப்பாடு தான். ஆனால் முஸ்ஸீம் நண்பர்கள் நோன்பு இருக்கும் போது இந்த தடவை தடபுடலாக கொண்டாட வேண்டாம் என்று கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்துல்லது. இல்லையென்றால் அன்று விடுமுறை விட்டு பார்ட்டியெல்லாம் வைத்திருக்கும் என் கம்பெனி. என் கம்பெனியில் வேலை பார்க்கும் 300 பேர்களில் 250க்கும் மேற்பட்டோர் மலையாளிகள். வளைகுடா நாடுகளில் இது சர்வ சாதாரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
சிறு வயதிலேயே மலையாளிகளின் பழகிய அனுபவம் இருந்ததிருக்கிறது. அது பக்கத்து வீட்டு "நிஷா சேச்சி" அம்மாவில் தொடங்கி பின் படிப்பிற்கு பீஸ் கட்ட முடியாத சமயங்களில் தொடர்ந்து உதவிய "முகுந்தன்" சார் வரை எல்லா தொடர்பும் நல்ல முறையில் தான் இருந்தது.சென்னையில் இருந்த வரையில் "மலையாளிகள்" என்ற யாதொரு பிரிவினை எண்ணமும் ஏற்பட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது என் அலுவலகத்திலும் சரி பள்ளி, கல்லூரிகளிலும் சரி வீட்டு அருகினிலும் சரி...... ஏனென்றால் அனைத்து இடங்களிலும் அவர்களின் ஆக்கரமிப்பு என்பது கணிசமாகவே இருந்துள்ளது. நாம் அந்த அளவிற்கு இதையெல்லாம் நினைத்து பார்ப்பதும் இல்லை யோசிப்பதும் இல்லை இது நம் தமிழனின் இயல்பு, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் இயல்பு. நானே இதை இங்கு வந்த பிறகே யோசித்து பார்க்கிறேன். முதன் முறையாக இந்த நிறுவனத்தில் சேரும் போது யாதொரு எண்ணமும் இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் பல மலையாளிகளின் எண்ணம் அதுவாக இல்லை என்பது வந்த கொஞ்ச நாள்களில் அது புலப்பட்டது. முக்கியமாக தமிழன் என்றால் அவர்களுக்கு ஒரு கேவலமான எண்ணம் தான் தோன்றுகிறது. நம்மை நாம் இல்லாத போது "பாண்டி" என்ற பட்ட பெயரிட்டே கிண்டலடிக்கிறார்கள். "பாண்டி" என்பது கெட்ட வார்த்தையில்லையென்றாலும் அந்த வார்த்தையை "தமிழனை" கிண்டலடிக்க உபயோகப்படுத்துகிறார்கள் என்கிற போது நமக்கு சுறுக்கென்று கோபம் வருகிறது. தமிழின் அருமையும், தமிழ்நாட்டின் பெருமைமிக்க வரலாரையும், தமிழரின் தியாக உணர்வையும் தெரியாத கத்துகுட்டிகளின் பேச்சைக் கேட்டு சினமாவதா என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன்.
இந்த அமிரகத்தில் நான் கண்ட மலையாளிகள் சில விஷயங்களில் நமக்கு முன்னே தான் இருக்கிறார்கள், அதில் ஒன்று கல்வி, மற்றொன்று குடிப்பது. உண்மையில் அவர்களை போல் குடிக்க தமிழனால் கண்டிப்பாக முடியாது. தமிழன் அந்த விஷயத்தில் தோற்று போவது நிஜம்.பின்பு அவர்களிடம் காணும் ஒரு வகையான முன்னேறும் திறமை. ஜால்ரா அடித்து முன்னேறுவது அவர்களுக்கு கை வந்த கலை. நமக்கு அது கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் நமக்கு ரோஷம் அதிகம். சுயமரியாதைக்கு இளுக்கு வரும் பட்சத்தில் நம்மால் அங்கே இருக்க முடியாது. இது பெரும்பாலான தமிழனின் கூட பிறந்தது.
மேலும் டி.வியில் மலையாள செய்தி ஒரு தடவை கேட்டால் ஒரு அல்ப விஷயம் தெரியும். அவர்கள் இந்திய அளவில் கொஞ்சம் புகழ் பெற்ற மலையாளிகளின் பெயரை "பறையும் போல்" மலையாளி மலையாளி என்று மூச்சுக்கு முச்சு சொல்வார்கள். உதாரணமாக இந்த வருடம் தேசிய விருது வாங்கிய ப்ரியா மணியை(இத்தனைக்கும் தமிழ் படத்திற்காக) மூச்சுக்கு மூச்சு மலையாளி ப்ரியாமணி என்று சொன்னதை கேட்க சிரிப்பாக இருந்தது(விசாரித்ததில் அம்மணி பாலக்காடாம்) இதே மாதிரி அஞ்சு ஜார்ஜ், முன்னால் குடியரசு தலைவர் நாராயணன் என எல்லோரையும் "விளிப்பார்கள்". எம்.ஜி.ஆர் மலையாளி என்பதை நான் மறந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு சமயத்தில் ஞாபகபடுத்துவார்கள்.
இது இல்லாமல் அரசியல் ரீதியாகவும் பிரச்சனை. கஷ்டப்பட்டு சேலம் கோட்டம் வாங்கினாலும் இன்னும் கன்னியாகுமரியும் திருநெல்வேலியும் "திருவனந்தபுர" கோட்டத்தில் தான் உள்ளது என்று நினைக்கிறேன். அந்த இரயில் நிலையங்களில் பணியாளர்கள் தமிழர்களை விட மலையாளிகளே அதிகம் என்பதாக கேள்வி. அதை எவ்வாறு மீட்க போகிறோமோ தெரியவில்லை.இதை தவிர கோயபுத்தூர் விமான நிலையத்தை "பன்னாட்டு" விமான நிலையமாக மாற்ற சென்னையில் உள்ள மலையாள உயர் அதிகாரி முட்டுக்கட்டை போடுவதை சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகள் சுட்டி காட்டின. ஏனென்றால் "திருவனந்தபுரம்" பன்னாட்டு விமான நிலையம் பாதிக்கப்படுமாம். என்னே கேரளப் பற்று!!!!!!
ஏற்கனவே சோழ நாடு கர்நாடகம் தண்ணீர் தராமல் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. கேரளவத்தரும் தண்ணீர் தரவில்லையென்றால் பாண்டிய நாடும் அதெ கதிதான்.
இதையெல்லாம் மறந்து நாம் பாரத தாயின் பிள்ளைகளாக இருப்பதாலும், இன்னும் கேரளத்திலும் தமிழகத்திலும் வாழும் சில நல்ல உள்ளம் கொண்ட சகோதர சகோதிரிகள் இருப்பதாலும் அவர்களுக்கு என் ஓணம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவல்லவோ தாய் பாசம்......(ரிக்சாகாரன் முனியான்டி)

கடந்த ஞாயிற்றுகிழமை நான் கண்ட நிகழ்ச்சி என் நெஞ்சையே கசக்கி பிழிவதாக இருந்தது. மேகக் கருங்கூட்டத்திலிருந்து ஈட்டி போல் வந்த மின்னல் என் நெஞ்சை கிழிப்பது போல் இருந்தது. பூமி மாதா வாய் பிளந்து என்னை முழுங்கி விட்டதா என்று எண்ணினேன். அய்யகோ........ஏய் நிறுத்து

நிறுத்து...ஸ்ஸ்ஸ்ஸப்பா......இப்பவே கண்ண கட்டுதே.....

அட மேட்டரு இன்னான்னா அதாப்பா நம்ம கலைஞர் டி.வியில ஒரு ப்ரொகிராம்பு கீதுல்ல, நம்ம குசுபு ரம்மா மேடம் யெல்லாம் வருவாங்களே அய்ய அதாம்பா "மானாட மயிலாட" கீதுல்ல அதுல ஒரு பொண்ணுப்பா, பேரெல்லாம் நமக்கு இன்னா திரியும், அந்த பொண்ணும் பையனும் இன்னா சூப்பரா ஆட்ச்சு திரியுமா. நா அப்டே மெர்சலாயிட்டேன். நம்ம சாந்தி தியேட்டர் பின்னால ஒரு வீடு கீதுல்ல, அட நா கூட ராவாச்சுன்னா கஸ்டமரு இஸ்துகின்னு பூவேன்ல அங்க நம்ம "ரோசா" ஒரு தம்மா தூண்டு துண்டு கட்டிகின்னு சும்மா இடுப்ப இஸ்துகின்னு சூப்பரா ஆடும்பா, அந்த ரோசாவெ தோத்துபொச்சுப்பா...அதல்லா வுடு, ஆட்னதுக்கு அப்பால ஒன்னு சொல்ச்சுப்பா அந்த பொண்ணு அத கேட்டதுக்கு அப்பால மன்சே அப்டே பீலிங்கா ஆயிச்சுப்பா. அதோட புள்ள ஒன்னு ஆசுபத்திரில கண்ணாடி புட்டில கீதாம். அய்ய உனக்கு யெல்லா டீடெய்லா சொல்னுமா. ஐ.சி.யூல கீதாம். பாவம்பா அந்த பொண்ணு மன்சுல யம்மா பெரிய பேஜார வச்சுகின்னு யன்னா குத்து (டான் ஸ்) குத்துச்சு திரியுமா???ஆடி முட்ச்சுட்டு நம்ம கலா மேடத்துகிட்ட அய்துன்னே சொன்னதுக்கு அப்பால மேடம் அப்டியே ஆடிபூச்சு. அந்த பாட்ட குயந்த வச்சுகின்ன அம்மாகெல்லாம் ஏதோ டெடிகேஷனாமே அது பண்ணுச்சு. நைட்டு குவார்டரு ராவா அட்ச்சும் தூக்கம் வர்ல திரியுமா. ஒரே மதர் சென்டிமென்டுபா. இப்டி தான் ஒருவாட்டி எனக்கு அப்போ ஒரு 6 வய்சு இருக்கும்பா எனக்கு ஒரெ வயுத்தாலயா போச்சு எல்லாரும் இது பூட்ட கேசுன்னு சொன்னாங்க. எங்கம்மா அப்பொ ரிக்கார்டு டான்சு ஆடும். அதுக்கு கூட போவாத என் பக்கத்திலேயெ கெடக்கும். அப்பறம் முனீஸ்வரன் தயவால பொழச்சேன். அதுக்கு அப்பால என் பேரு முனியான்டின்னு வச்சுது. அந்த பீலிங் தாம்பா ரெண்டு நாளா தூக்கமே வர்ல......

ட்ரிங் ட்ரிங்...ட்ரிங் ட்ரிங்.....(ஏதாவது செய்யனும் பாஸ்)

ட்ரிங் ட்ரிங்...ட்ரிங் ட்ரிங்.....
நான்:"ஹலோ"
நண்பன்:"மச்சி நான் தான்டா"
நா:"சொல்ட்ரா மச்சி எப்டி இருக்க?"
ந:"நல்லாயிருக்கேன் உன் வலைபதிவுயெல்லாம் எப்டி போகுது"
"எதோ போய்ட்டுயிருக்குடா, கொஞ்சம் பேரு இப்பதான் படிக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்"
"சரி எல்லாம் கொஞ்ச நாள்ல பிக்கப் ஆயிடும். ஏய் உன்னை யோரோ கூப்பிடுற மாதிரி இருக்கு?"
"ஆமாடா கொஞ்சம் வெயிட் பண்ணு............"
சிறிது நேரம் கழித்து
நண்பன்: "யாருடா அது?"
நான்:"பக்கத்து வீட்டு 'நாடாரம்மா'டா. அவுங்க வீட்டு சாவி வந்து வாங்கிட்டு போனாங்க"
"என்னது நாடாரம்மாவா? அவுங்க பேரே அதுதானா?"
"இல்லன்னு நினைக்கிறேன். ஆனா ஒர்ஜினல் பேரு தெரியாது. எல்லாரும் இப்படி தான் கூப்பிடுவாங்க. ஏன் அத கேக்கிற"
"இல்ல.. இந்த ஜாதி பேரு வச்சு கூப்பிட்றத எப்ப நிறுத்த போரீங்கன்னு தெரியல"
"ஏன் அதிலென்ன தப்பு. ஜாதி இல்லாம எப்படி இருக்க முடியும். எங்க ஊர்லயெல்லாம் ஜாதிக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுப்போம் தெரியுமா!. "
"கிழுஞ்சுது!!! ஏண்டா படிச்ச நீயே ஜாதிக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கலாமா"
"ஏன்டா அப்புறம் ஜாதியே வேண்டாம்ன்னு சொல்றயா? எப்படிடா? என் ஜாதிக்கு எத்தனை சலுகை இருக்கு தெரியுமா? இடஒதிக்கீடு மூலமா ஈஸியா கவர்மென்ட் ஜாப் வாங்கிடலாம். ஏன்னா எங்க ஊரு எம்.எல்.ஏ எங்க ஜாதிதான் தெரியுமா. நாங்கெல்லாம் சேர்ந்த்து தான் அவரை எம்.எல்.ஏ ஆக்குனோம்."
"அடப்பாவி உங்கள மாதிரி முட்டாலுங்கள திருத்தவே முடியாது இடஒதிக்கீடு ஒன்னு இருக்குற வர கீழ் தட்டு மக்கள் முன்னுக்கு வரவே முடியாது. டேய் மச்சான் பள்ளத்தில இருக்கிறவனக்கு கயிறு போட்டு மேல தூக்கனுமே தவிர அவனுக்கு சாப்பாடு தண்ணி எல்லாம் பிச்சை போடுற மாதிரி கொடுத்து அவனை அங்கையே இருக்க சொன்னா அவன் உயிர் வாழ்ந்து அர்த்தமே இல்ல. அதுக்கு சாதியை வேரோடு பிடுங்கணும்"
"அது சரி இவ்ளோ பேசுருயே சாதியை வேரோடு புடுங்க நீயே ஒரு ஐடியா சொல்லேன்?"
"என்னடா செடியை வேரோடு புடுங்கற மாதிரி உடனே புடுங்க சொல்ற. இருந்தாலும் என் சின்ன மூளைல இருக்கிற ஒரு ஐடியாவ சொல்றேன். இதை உடனே சரி செய்ய முடியாது உன்ன, என்ன மாதிரி இளைஞர்கள் மனசு வச்சா எதிர்காலத்துல இது கண்டிப்பா முடியும். இப்ப இதுவரை போனது போகட்டும் இனி சாதியினால வரக்கூடிய சலுகைகள் எல்லாத்தையும் மறுக்கணும். நம்முடைய குழந்தைகளுக்கு ஜாதின்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு சின்ன வயசிலயே சொல்லி கொடுக்கணும். பள்ளி கல்லூரிகளில் சேர்க்கும் போது ஜாதியை கேட்டு வற்புருத்த கூடாதுன்னு நீதிமன்றமே அறிவுரித்தியிருக்கிறது. நாம இதை செயல்படுத்துவோம் நம்மள பார்த்து ஒருத்தராவது மாறுவாங்க. அந்த ஒருத்தரை பார்த்து இன்னொருத்தர் இது இப்படியே தொடரும். மேலும் அரசாங்க வேலைக்கு அப்ளே செய்யும் போது 'அதர்ஸ்'ன்னு ஒரு பகுதி இருக்கும் அதில் அப்ளே செய்வோம். நாளடைவில் அந்த அதர்ஸ் பகுதியை அரசாங்கம் கொஞ்சம் அதிகரிக்கும். மற்ற பகுதியை தானாக குறைக்கும். ஆனா நாம எடுத்த முடிவுல உறுதியா இருக்கணும். ."
"சரிடா நீ சொல்றது நமக்கு ஓகே ஆனா கிராமத்துல கீழ் சாதின்னு அரசாங்கமும், மற்ற சாதிக்காரங்களும் சொல்லி ஒதுக்கி வச்சிருக்கிற ஆளுங்க என்ன செய்வாங்க?"
"நான் மேலே சொன்னதெல்லாம் நாம செய்ய வேண்டியது. நம்ம கல்வி முறை உலகத்திலேயே வேற எந்த நாட்டிலேயும் இல்லாத கேவலமான முறை அது பாடத்திட்டத்திலேயும் சரி இடஒதிக்கீட்லேயும் சரி. மேல சொன்னத நாம கொஞ்சம் கொஞ்சமா நிறைவேத்தும் போது அரசாங்கம் ஜாதி ஒதிக்கீட்டை கிராமபுற மாணவர்கள் இடஒதிக்கீடுன்னு தனியா கொடுக்கலாம். அதுவும் சமமான கல்வி எல்லாருக்கும் கிடைக்கும் வரை மட்டும். எப்போ கிராமபுற மாணவர்கள் தேர்ச்சி விகிதம் படிப்படியா அதிகரிக்குமோ அப்போ அந்த ஒதிக்கீடையும் படிப்படியா எடுத்திடலாம். ஏன்னா அப்போ எல்லாருக்கும் சமகல்வி கிடைக்குதுன்னு அர்த்தம்"
நா: "மச்சி ஒரு ஐடியா! பேசாம "ஜாதி இல்லாதவர் சங்கம்"ன்னு ஒரு கட்சி ஆரபிக்கலாம். அதுல நம்மல மாதிரி இளைஞர்களை மட்டும் சேர்த்துப்போம். உறுப்பினர்கள் நிறைய பேர் சேர்ந்திட்ட பிறகு நமக்கு இத்தனை சதவிகிதம் இடஒதிக்கீடு வேணும்ன்னு போராட்டம் எல்லாம் செய்யலாம். பின்னால ஆட்சியை கூட கைப்பற்றலாம்."
"உன் வாயில தீயை வச்சு கொளுத்த...ஏற்கனவே கடவுள் இல்லன்னு சொன்ன ஒரு கும்பல் பின்னால ஆட்சியை பிடுச்சு அந்த கடவுள வச்சே அரசியல் செய்யுது. இதுல, அதுவும் நீ கட்சி ஆரபிச்சா அந்த ஜாதியை வச்சே அரசியல் செய்வ....மச்சி நான் மறுபடியும் சொல்றேன் கேளு நாம சரியா இருந்தோம்ன்னா அரசாங்கம் நமக்கு நல்லதே செய்யும். எல்லாம் நம்மகிட்டதான் இருக்கு"
"அப்ப நீ உன் சந்ததியினருக்கு ஜாதியினால எந்த சலுகையும் வாங்கி கொடுக்க மாட்டேன்னு சொல்லு"
"சத்தியமா. நான் முடிவு எடுத்துட்டேன். என்னை பார்த்து ஒருத்தர் முடிவுயெடுத்தாலும் இன்னும் இருபது முப்பது வருஷத்துல கண்டிப்பா ஒரு மாறுதல் வரும். ஏன்னா "ஏதவாது செய்யனுமே" மச்சி."
"மச்சி நீ சொன்னத வச்சு பாக்கும்போது எனக்கும் "ஏதாவது செய்யனும்" போல இருக்கு. இத பத்தி நாம டீடெய்லா பேசுவாம் சாய்ங்காலம் "நாயர்" டீ கடைக்கு வந்துடு"
"உன்ன திருத்தவே முடியாது, போன வச்சு தொல"
டொக்.
தொடரும்.....

ஆஸ்காரில் தமிழர்கள்-காமெடி

அட வேற ஒன்னுமில்லைங்க. நேத்து நைட்டு ஆஸ்கார் விருது வாங்கின ஒரு ஆங்கில படத்தை பார்த்தேன். நம்ம தமிழ் படமும் இந்த மாதிரி ஆஸ்கார் எல்லாம் எப்படா வாங்கும்ன்னு நினைச்சேன். அப்புறந்தான் தூங்கும்போது சப்போஸ் கிடைச்சு நம்மாலுங்க வாங்க போனாங்கன்னா எப்படி இருக்கும்ன்னு நினைச்சப்போ சிரிப்பு வந்தது. ஏன்னா நீங்களே அதை படுச்சுபாருங்க....

அமெரிக்காவில் ஆஸ்கார் அரங்கத்துக்கு வெளியே நம்ம தமிழ் நிருபர் வந்த நட்சத்திரங்களிடம் பேட்டி எடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார்..

முதலில் நிக்காம சென்ற நம்ம சூப்பர் ஸ்டார்...

நிருபர் "சார்.. சார்.. சார் கொஞ்சம் நில்லுங்க"

"நீங்க யாரு இந்த ஊரு விநியோகிஸ்தரா?. உங்களுக்கு எவ்ளோ நஷ்டம்? நாளைக்கே ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து காச வாங்கிக்குங்க"

"இல்ல சார் நான் நிருபர் சார். அதுவுமில்லாத நாங்க தான் உங்கல வச்சு காசு நிறைய காசு சம்பாதிக்கிறோம். நியாயமா பார்த்தா நாங்க தான் உங்களுக்கு "ராயல்டி"யே கொடுக்கணும். மேட்டர் அதில்லை சார். உங்க எந்த படம் போட்டில இருக்கு?"

(இதை படிக்கும் போது ரஜினி ஸ்டைலில் வாயை கோனையாக வைத்து படிக்கலாம், தவறில்லை)

"ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா எனக்கு போட்டியா. கண்ணா எனக்கு போட்டின்னு சொன்னாக்கா இங்க ஆரும் கிடையாது. ஆனா...ஜே.கே ரித்தீஷ் படம் போட்டில இருக்குன்னு சொன்னாங்க. அந்த படம் மட்டும் ஜெயிச்சாக்கா இனி தமிழ்நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது"

"அட போங்க சார். "நீங்க இப்டி சொன்னாக்கா அவுங்க ஜெயிச்சுருவாங்க"ன்னு தெரியாதா?"ன்னு அவர் ஸ்டைலியே நிருபர் கலாய்க்க தலைவர் டென்ஷனாகி போகிறார்.

அடுத்து உலகநாயகன்

நிருபர்"சார் உங்க படம் நிறைய போட்டில இருக்கும்ன்னு தெரியும் அதனால இந்த 'ஆஸ்காரில் தமிழர்கள்' மேட்டரில் எப்படி பீல் பண்றீங்க"

உலக நாயகன் கரகரத்த குரலில் "உண்மையில் சொல்ல போனால் இந்த ஆஸ்கார் என்பது ஒன்றும் குதிரைக்கு கொம்பு விஷயமில்லையென்றாலும் இன்னும் எட்டா கனியாக இருப்பதால் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லையென்றால் நாம் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துரைக்காமல் விடுவதனால் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று காரணம் கூறுபவர்களுக்கு நமது கையினால் விருது வழங்கும் நாள் வரும் என்பது தான்" என்று முடிக்க,

நிருபர் பொறுமையிலந்து "சார் உங்க படம் மாதிரியே ஒன்னும் புரியல, ஆளை விடுங்க" என்று கூறி எஸ்கேப் ஆகி விடுகிறார்.

அடுத்து கேப்டன்...

"டேய் இந்த விருதுல 356 படங்கள் போட்டியிடுது, அதுல 254 ஆங்கில படம், 17 ஜெர்மானிய படம், 21 ஸ்பானிஷ் படம், 23 சைனீஸ் படம், 18 ஈரானிய படம், 25 இந்திய படம் அதுல 15 தமிள் (எழுத்து பிழையல்ல) படம்.ஆங்ங்ங்ங்..."

நிருபர்"கேப்டன் உங்க கணக்கு(ம்) உதைக்குது. எல்லாம் கூட்டினா 358 வருது"

"டேய் உன்ன யாருடா கூட்ட சொன்னது நான் சொல்றத மட்டும் கேளு"

"என் படம் தனியா போட்டியுடும் எவனோடையும் கூட்டணி கிடையாது"ன்னு எலக்க்ஷன் ரேஞ்சுக்கு பேசிக் கொண்டே உள்ளே சென்றார்.

அப்போது ரோடை கிராஸ் செய்து விஷால் வர ஒரு கார் அவரை நோக்கி வேகமாக வர நிருபர் "விஷால் காரு...."ன்னு கத்த மயிரிழையில் தப்பினார். ஆனால் நிருபர் " விஷால் காரு(garu)"ன்னு கத்தினதாய் விஷால் தவறாக புரிந்து "மீரு தெலுங்கா"ன்னு தசாவதாரம் கமல் ஸ்டைலில் கேக்க, நிருபர் டென்ஷனாகி "அட போங்க சார் உங்கள எச்சரிக்கை செய்தேன்"ன்னு சொல்ல உடனே முஞ்சியை 'சல்யூட்' ஸ்டைலில் விறைப்பாக்கி(ன மாதிரி நினைத்துக்) கொண்டு உள்ளே சென்றார்.

பின்னாலயே வந்த அவர் டைரக்டர் ஆர்.டி.ராஜசேகர்யை நிருபர் மடக்க அவரும் "மீருக்கு ஏமி காவாலி"ன்னு கேக்க, நிருபர் "சார் நான் தமிழ் நிருபர் என்ன அடையாளம் தெரியல"

"நாக்கு எல்லாம் மறந்துலு போச்சு, நூவு, தமிலு, நேனு இன்டி எல்லாம்"ன்னு பிதற்ற நிருபர் கொஞ்சம் பயத்தோடு ஜகா வாங்குகிறார்.

அதற்குள் வாசலில் ஒரு சப்தம் கேட்க, பார்த்தால் நம்ம தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம ராமநாராயணன் உள்ளே விட மாட்டேன் என்று கூறிய செக்யூரிட்டியை பாம்பை காட்டி பயமுறுத்தி உள்ளே செல்ல முயன்றார். நிருபரை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவரிடம் வந்தார்.

நிருபர் "என்ன சார் இரும்பு அடிக்கிற இடத்தில 'ஈ' க்கு என்ன வேலை?"ன்னு கேட்டுக்கொண்டே கையில் பார்த்தால் இரண்டு மூன்று சிடிக்கள் இருந்தன.

"இல்ல தம்பி கலைஞரின் ஆசியில் விழா நல்ல முறையில் நடக்குது. அதனால 'உளியின் ஓசை' படத்தை போட்டியில்லாம தேர்ந்தெடுக்க சொல்லலாம்ன்னு படத்தோட கேஸட் எடுத்துட்டு உள்ளே போலாம்னா செக்யூரிட்டி விடமாட்டேங்கிறான்".

நிருபர்"சார் எந்த கருமத்துல இதை போட்டியில்லாம தேர்ந்தெடுக்க சொல்றீங்க"

"ஹாலிவுடில் நலிந்த கலைஞருக்கு 4 லட்சம் நிதியுதவி தருவதாக தலைவர் அறிவிக்கபோறாரு. "லின்சே லோகன்"க்கு கலைஞர் விருதும் "சான்ட்ரா புள்ளாக்"க்கு அண்ணா விருதும் கொடுக்க போறாரு. நீங்களே சொல்லுங்க தம்பி இதெல்லாம் சொன்னா 'உளியின் ஓசை'க்கு ஆஸ்கார் கிடைக்கும்ல?"

நிருபர்"ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே, நீங்க போங்க சார் ஆஸ்கார் உங்களுக்கு தான்"

நிருபர் இந்த வேலையே வேணாம்ன்னு எண்ணிக்கொண்டே வெளியில் வந்தால் வெளியே "உண்ணாவிரதம்"ன்னு ஒரு போர்டை கண்டு ஆச்சிரியபட்டார். இங்க யாருடான்னு பார்த்தா நம்ம மருத்துவர் அய்யா மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். "இனி ஆங்கில படங்களில் யரும் குடிக்கும், புகை பிடிக்கும் காட்சி வைக்க கூடாது. மேலும் ஆஸ்காரில் தமிழனுக்கு 5% இடஒதுக்கீடு வேண்டும். அதில் உள் ஒதுக்கீடாக 2% எங்களுக்கு(ஜாதிக்கு) ஒதுக்க வேண்டும். எங்களுக்காக கலைஞர் என்ன செய்திருக்கிறார்?."ன்னு கேட்க நிருபர் தலை சுற்றி கீழே விழுகிறார்.

(பி.கு: இதில் வரும் அனைத்தும் காமெடிக்காக எழுதியது. யாரும் தயவுசெய்து சீரியஸாக எடுக்க வேண்டாம்)

ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு தெரியுது...அப்டியே கீபோர்டை நாலு தட்டு தட்டி சொல்ட்டு போங்க...
Related Posts with Thumbnails