ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்...

ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்...
நான்: "ஹலோ?"

நண்பன்: "டேய் மச்சி நான் தான்டா"

நா:"சொல்ட்றா மச்சி என்ன விசயம்"

ந:"ஏன்டா டல்லா பேசுற"

நா:"நேத்து நைட் ஸோ "சத்யம்" படத்துக்கு போனேன்டா, அது தான்"

"அய்யையோ ஏண்டா தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிற"

"அதில்லைடா படத்தை பார்த்துட்டு விமசர்சனத்தை இன்னைக்கு ப்ளாக்கர்ல அப்டேட் பண்ணலாம்ன்னு பார்த்தேன்"

"அதுதான் நிறைய பேர் செய்திட்டாங்களேடா?"

"இல்லடா இப்பெல்லாம் படத்தை பத்தி ஏதாவது கன்னாபின்னான்னு போட்டோம்ன்னா நிறைய பேர் வந்து படிப்பாங்க, அப்பறம் ஒரு நூறு பின்னூட்டத்துக்கும் மேலே வரும் அப்படியே பேமஸ் ஆயிடலாம். ஹி ஹி"

"ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!!!!!!!!! இதெல்லாம் ஒரு பொழப்பா"

"இல்லடா நாலஞ்சு இடுக்கை போட்டேன் யாரும் பின்னூட்டம் சரியா போடல. "வால் பையன்" "மஞ்சூர் ராசா" " hisubash"மாதிரி நல்லவங்க தான் பின்னூட்டம் போட்றங்க"

"டேய் டகால்டி தலையா, நாலே நாலு இடுக்கைய போட்டுட்டு அதுவும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஆமா பின்னூட்டம் போடறவங்க மட்டும் தான் உனக்கு நல்லவங்களா? எவ்ளோ பேர் படுச்சுட்டு நேரம் கிடைக்காம பின்னூட்டம் போட முடியதிற்ல தெரியுமா?"

"ஏண்டா மச்சி?. அப்ப நீயாவது தமிழ்மணத்தில பேமஸ் ஆக ஒரு வழி சொல்லு"

"ஏண்டா எவ்வளோ பேர் நல்ல கதை, கவிதை கட்டுரைன்னு எழுதுறாங்க தெரியுமா! அவுங்கள மாதிரி எழுதுடா"

"எப்படிடா எழுதறது? எனக்கு ஒன்னும் தோணலயே"

"அப்ப ஒன்னு செய். நைட்ல எங்க தூங்கற?"

"ஏன் ரூம்லதான்"

"இன்னைக்கு மொட்ட மாடில தூங்கு"

"ஏன்டா?"

"வானத்துல இந்த நிலா, நட்சத்திரம் அப்பறம் தென்றல்(காத்து) இதெல்லாம் பாக்கும் போது ஏதாவது தோணும். பக்கத்துல பேப்பர் பேனா வச்சுக்க. ஏதாவது தோணும் போது பட்டுன்னு எழுதிடு!"

"அப்படிங்கிற, அப்ப நாளைக்கு உனக்கு போன் பண்றேன்"

டொக்.

நாளை......

ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்...
நான்: "ஹலோ? "ஹச்" "ஹச்"

நண்பன்: "டேய் மச்சி நான் தான்டா ஏன்டா தும்முற"

"உன் பேச்சை கேட்டு நைட்ல மாடில படுத்ததுல கதை கவித ஒன்னும் வரல. பனில சளியும் தும்மலும் தான் வந்தது"

"அய்யையோ. அப்பறம்?"

"என்ன கதையா சொல்றேன். அப்புறம்ன்னு....... இது வொர்க்கொட் ஆகாது மச்சி. ஒரு யோசனை!"

"என்ன?"

"அதிகபிரசிங்கி சாரு நிவேதா! ஞானசூன்யம் ஞாநின்னு "சூடான இடுக்கை"ல போட்டோம்ன்னா ரொம்ப சீக்கிரம் பேமஸ் ஆயிடலாம்"

"போடா ...இவனே"

"ஏன்டா இதுவும் வேணாமா? எல்லோரும் எழுதுறதுதானே?"

"டேய் அவுங்கெல்லாம் எழுத்துலகில கொஞ்சமாவது சாதிச்சவங்க. அதுவுமில்லாம நீ சொல்ற மாதிரியே அவுங்க இருந்தாலும் அவங்களை விமர்சிக்க வேற பெரியவங்க இருக்காங்க, இனியும் வருவாங்க.. நீ இப்ப தான் ப்ளாக்கர் எழுதிட்டுருக்க. அதுக்குள்ள அவுங்களை விமர்சிச்சா அது தான் "அதிகபிரசங்கிதனம்".உடனே நீ தான் பெரியவன்னு சொல்லாத, நேர்ல வந்து அடிப்பேன்."

"அப்படிங்கிற"

"ஆமாங்கிறேன். எவ்வளவோ பேர் நல்லா சூப்பரா ஜாலியா எழுதுறாங்க தெரியுமா?. அவுங்க ப்ளாக்கற பாருடா. ஏதாவது யோசன கிடைக்கும்"

"டேய் மச்சி இப்ப எனக்கு ஒரு "பல்பு" எரிஞ்சுதுடா."

"என்னடா?"

"இப்ப நம்ம பேசுனத அப்படியே போட்டா எப்படி இருக்கும்!!!!"

"விளங்கிச்சு போ! போனை வச்சு தொல"

டொக்.

தொடரும்....

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

மதுவதனன் மௌ. said...

ஹா..சுவாரசியமா இருக்கு...படுட கஷ்டமும் நல்லா விளங்குது...ஜாமாய்ங்க..

நான் ஆதவன் said...

நன்றி மதுவதனன்.

உங்களுக்கு தெரியுது. மத்தவங்களுக்கு தெரியலயே!

Anonymous said...

itis nice

நான் ஆதவன் said...

நன்றி. பேரையும் போட்டா நல்லாயிருக்கும்...

இவன் said...

ஆஹா நல்லா இருக்கு ஆதவன்.... நானும் ஆதவன்தான்

நான் ஆதவன் said...

//"வால் பையன்" "மஞ்சூர் ராசா" " hisubash"மாதிரி நல்லவங்க தான் பின்னூட்டம் போட்றங்க"//
நன்றி இவண் (ஆதவன்).
அவுங்க வரிசையில உங்களையும் சேர்த்துட்டேன்

Related Posts with Thumbnails