தசாவதாரம்

சக பதிவர் கயல்விழி அவர்களின் தசாவதாரம் விமர்சனத்தை படித்தேன். இதில் என் கருத்தை கூறுவதற்கு முன், நான் இது போன்ற வலைபதிவுகளை படிக்க ஆரம்பித்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. மேலும் இது என் கருத்து தான். இதே கருத்தை வேறு ஒருவர் முன்பே சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கலாம்......

எனக்கு முன் இத்திரைப்படத்தை துவைத்து காய வைத்து, கிழித்து மீண்டும் பஞ்சாக்கியிருப்பார்கள் வேறு நண்பர்கள்.


இருந்தாலும் உங்களின் விமர்சனத்தை தான் நான் முதலில் படித்தேன். நீங்கள் கமலின் பத்து வேடம் தேவையற்றது என்று கூறியிருந்தீர்கள். கொஞ்சம் யோசித்தால் ஒரு விசயம் பிடிபடும். ஒவ்வொரு கமலும் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருப்பார். பூவராகவன் கிறிஸ்டியன், கலிபுல்லா முஸ்ஸிம், அவதார் சிங் சீக்கிய மதம், புத்த மதத்தை சேர்ந்தவராக சைனா கமல், இந்து பாட்டியாக ஒரு கமல்,பின்பு நாத்திகராக கோவிந்த் இவர்கள் அனைவரும் (நாத்திகரை தவிர) அவர்களுக்கே தெரியாமல் உலகத்தை காப்பாற்ற உதவி செய்திருப்பார்கள்.புஸ் மற்றும் கிளிஸ்டர் வேடம் மட்டும் இன்னும் எனக்கு தெளிவாகவில்லை.

இதை தான் கமல் படம் வெளிவரும் முன் ஏற்பட்ட பிரச்சனையில் இது எல்லா மதத்தினருக்கும் பிடிக்கும் என்றார். ஆக ஒவ்வொரு மதத்தினரையும் இதில் சேர்த்திருப்பதனால் இவ்வுலகத்தை காப்பாற்ற எல்லோருடைய பங்கும் அவசியம் என்பதை எடுத்துரைக்கிறார்.மேலும் பூவராகவான் மிகவும் முகம் பற்றி தேவையில்லாத ஒரு கருத்தை நிலவி வருகிறது. எனக்கு ஒன்றும் விகாரமாக தெரியவில்லை. நிறம் மட்டும் கறுப்பு. ஒரு வேளை தற்போது உண்மையாக தலித் உரிமைக்காக போராடும் தலைவரை மனதில் கொண்டு அந்நிறத்தை தேர்தெடுத்திருக்கலாம்.

ஆகவே தமிழ் திரையுலகிற்காக தன் முதலீடை திரும்ப திரும்ப இடும் உலக நாயகனை வெறும் நூறு ரூபாய் மட்டும் செலவு செய்து படத்தை பார்க்கும் நாம் விமர்சனம் செய்யும் முறை சரியா?

தன் கதாபாத்திரத்தை தவிர மற்ற கதாபாத்திரத்தை டம்மியாக்கிவிடுவார் என்று வேறு கூறியுள்ளீர். "அன்பே சிவனில்" மாதவன் சம்மதித்து தானே நடித்துள்ளார். அது அவருக்கு தெரியாதா? கமலை போன்று கனத்த கதாபாத்திரத்தை நடிக்க இன்னும் "மேடி" பல ஆண்டு உழைக்கவேண்டும். அந்த கேரக்டரே "சாக்லேட் பாய்" கேரக்டர். அதற்கு நாசரையா நடிக்க வைக்க முடியும்???. குருதிபுனல் மற்றும் தேவர் மகன் படத்தில் அவருக்கு சமமான கேரக்டர் நாசருக்கு இல்லையா???

நேற்று வந்த "புரட்சி தளபதி" "இளைய தளபதி" எல்லாம் படத்தில் அவர்களை தவிர வேறு யாரும் படத்தில் இல்லாதது போல் நடிக்கும் போது கமல் நினைப்பதில் என்ன தவறு?அதற்காக கமலின் எல்லா படமும் நல்ல படம் என்று கூறவில்லை.


பின்பு.... கொஞ்சம் பெரிதாக டைப் செய்தால் நேற்று கோவிக்கண்ணன் சொன்னது போல் பழைய ஆள் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். சத்தியமாக நான் வலைபதிவிற்கு புதியவன்.

4 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஜோ / Joe said...

வருக! வருக!!

Anonymous said...

//தமிழ் திரையுலகிற்காக தன் முதலீடை திரும்ப திரும்ப இடும் உலக நாயகனை வெறும் நூறு ரூபாய் மட்டும் செலவு செய்து படத்தை பார்க்கும் நாம் விமர்சனம் செய்யும் முறை சரியா?//

நல்லாருக்கு.

இவன் said...

என்ன கயல்விழி சத்ததையே கானோம் இங்க வந்து ஒரு கும்மி போடலாம் வாங்க

நான் ஆதவன் said...

//என்ன கயல்விழி சத்ததையே கானோம் இங்க வந்து ஒரு கும்மி போடலாம் வாங்க//

ஆஹா.. கூட்டத்தை சேர்க்கிறாங்கடா..

Related Posts with Thumbnails