ஒலிம்பிக்கில் சீனா தங்கம் வாங்கிய ரகசியம் அம்பலம்

கடைசியா இந்திய ஒலிம்பிக் சங்கம் சைனா ஒலிம்பிக்கல தங்கம் வாங்கினதை கண்டுபிடிச்சுடாங்க.

ஆனா அதை எப்படி நமக்கு தைரியமா செயல்படுத்துறதுன்னு எல்லாருக்கும் ஒரே கவலை ஏன்னா..
கீழே படத்தை பாருங்க....
wikipediaவின் டப்பா கூத்து விளக்கம்!!!!!

இந்த கொடுமையை என்னன்னு சொல்ல....
தமிழனின் புகழை எப்படியெல்லாம் பரப்புராங்க பாருங்க...
படத்தை க்ளிக் செய்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்


அப்படியே கிழே உள்ள லின்ங்யை கிளிக் செய்தீங்கன்னா முழுசா படிக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Dappaankuthu

கருத்த சொல்ல மறந்திராதீங்க


ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்...

ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்...
நான்: "ஹலோ?"

நண்பன்: "டேய் மச்சி நான் தான்டா"

நா:"சொல்ட்றா மச்சி என்ன விசயம்"

ந:"ஏன்டா டல்லா பேசுற"

நா:"நேத்து நைட் ஸோ "சத்யம்" படத்துக்கு போனேன்டா, அது தான்"

"அய்யையோ ஏண்டா தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிற"

"அதில்லைடா படத்தை பார்த்துட்டு விமசர்சனத்தை இன்னைக்கு ப்ளாக்கர்ல அப்டேட் பண்ணலாம்ன்னு பார்த்தேன்"

"அதுதான் நிறைய பேர் செய்திட்டாங்களேடா?"

"இல்லடா இப்பெல்லாம் படத்தை பத்தி ஏதாவது கன்னாபின்னான்னு போட்டோம்ன்னா நிறைய பேர் வந்து படிப்பாங்க, அப்பறம் ஒரு நூறு பின்னூட்டத்துக்கும் மேலே வரும் அப்படியே பேமஸ் ஆயிடலாம். ஹி ஹி"

"ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!!!!!!!!! இதெல்லாம் ஒரு பொழப்பா"

"இல்லடா நாலஞ்சு இடுக்கை போட்டேன் யாரும் பின்னூட்டம் சரியா போடல. "வால் பையன்" "மஞ்சூர் ராசா" " hisubash"மாதிரி நல்லவங்க தான் பின்னூட்டம் போட்றங்க"

"டேய் டகால்டி தலையா, நாலே நாலு இடுக்கைய போட்டுட்டு அதுவும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஆமா பின்னூட்டம் போடறவங்க மட்டும் தான் உனக்கு நல்லவங்களா? எவ்ளோ பேர் படுச்சுட்டு நேரம் கிடைக்காம பின்னூட்டம் போட முடியதிற்ல தெரியுமா?"

"ஏண்டா மச்சி?. அப்ப நீயாவது தமிழ்மணத்தில பேமஸ் ஆக ஒரு வழி சொல்லு"

"ஏண்டா எவ்வளோ பேர் நல்ல கதை, கவிதை கட்டுரைன்னு எழுதுறாங்க தெரியுமா! அவுங்கள மாதிரி எழுதுடா"

"எப்படிடா எழுதறது? எனக்கு ஒன்னும் தோணலயே"

"அப்ப ஒன்னு செய். நைட்ல எங்க தூங்கற?"

"ஏன் ரூம்லதான்"

"இன்னைக்கு மொட்ட மாடில தூங்கு"

"ஏன்டா?"

"வானத்துல இந்த நிலா, நட்சத்திரம் அப்பறம் தென்றல்(காத்து) இதெல்லாம் பாக்கும் போது ஏதாவது தோணும். பக்கத்துல பேப்பர் பேனா வச்சுக்க. ஏதாவது தோணும் போது பட்டுன்னு எழுதிடு!"

"அப்படிங்கிற, அப்ப நாளைக்கு உனக்கு போன் பண்றேன்"

டொக்.

நாளை......

ட்ரிங் ட்ரிங்.. ட்ரிங் ட்ரிங்...
நான்: "ஹலோ? "ஹச்" "ஹச்"

நண்பன்: "டேய் மச்சி நான் தான்டா ஏன்டா தும்முற"

"உன் பேச்சை கேட்டு நைட்ல மாடில படுத்ததுல கதை கவித ஒன்னும் வரல. பனில சளியும் தும்மலும் தான் வந்தது"

"அய்யையோ. அப்பறம்?"

"என்ன கதையா சொல்றேன். அப்புறம்ன்னு....... இது வொர்க்கொட் ஆகாது மச்சி. ஒரு யோசனை!"

"என்ன?"

"அதிகபிரசிங்கி சாரு நிவேதா! ஞானசூன்யம் ஞாநின்னு "சூடான இடுக்கை"ல போட்டோம்ன்னா ரொம்ப சீக்கிரம் பேமஸ் ஆயிடலாம்"

"போடா ...இவனே"

"ஏன்டா இதுவும் வேணாமா? எல்லோரும் எழுதுறதுதானே?"

"டேய் அவுங்கெல்லாம் எழுத்துலகில கொஞ்சமாவது சாதிச்சவங்க. அதுவுமில்லாம நீ சொல்ற மாதிரியே அவுங்க இருந்தாலும் அவங்களை விமர்சிக்க வேற பெரியவங்க இருக்காங்க, இனியும் வருவாங்க.. நீ இப்ப தான் ப்ளாக்கர் எழுதிட்டுருக்க. அதுக்குள்ள அவுங்களை விமர்சிச்சா அது தான் "அதிகபிரசங்கிதனம்".உடனே நீ தான் பெரியவன்னு சொல்லாத, நேர்ல வந்து அடிப்பேன்."

"அப்படிங்கிற"

"ஆமாங்கிறேன். எவ்வளவோ பேர் நல்லா சூப்பரா ஜாலியா எழுதுறாங்க தெரியுமா?. அவுங்க ப்ளாக்கற பாருடா. ஏதாவது யோசன கிடைக்கும்"

"டேய் மச்சி இப்ப எனக்கு ஒரு "பல்பு" எரிஞ்சுதுடா."

"என்னடா?"

"இப்ப நம்ம பேசுனத அப்படியே போட்டா எப்படி இருக்கும்!!!!"

"விளங்கிச்சு போ! போனை வச்சு தொல"

டொக்.

தொடரும்....

ஜோக்ஸ்

கொஞ்சம் "ஏ" தனமா இருக்கும், பிடிக்காதவங்க படிக்க வேண்டாம்


பத்திரக்கை செய்தி:லேடிஸ் ஹாஸ்டலில் தீ!! தீயை கட்டுபடுத்த 1 மணி நேரம் ஆனது. ஆனால் தீயணைப்பு வீரர்களை கட்டுப்படுத்த 3 மணி நேரத்திற்க்கும் மேலானது!!!!!!


நயன் தாராவோட தபால் தலை வெளியிட்டா என்ன ஆகும். என்ன எல்லாரும் தலைகீழா எச்ச தொட்டு ஒட்டுவாங்க!!


ஒரு தாய் காலேஜ் போகும் மகளிடம் "உன்னிடம் செக்ஸைப் பற்றி பேசும் நேரம் வந்துவிட்டது" என்றார். அவள் "சரிம்மா சொல்லு உனக்கு என்ன டவுட்?"


ஒரு பையன் அப்பாவிடம் "அபபா confidentக்கும், confidentialக்கும் என்ன வித்தியாசம்?", அப்பா"நீ என் மகன் அது confident, உன் அடுத்த வீட்டு ப்ரெண்ட்யும் என் மகன் அது confidential"


ஒரு சர்தார்"மும்பையில் எல்லாம் Free,Pickup, Drop, Food, Drink, Hotel even Sex." மற்றொருவன்"அப்படியா உனக்கு எப்படி தெரியும்?"

"என் மனைவி தான் சொன்னாள்"

தசாவதாரம்

சக பதிவர் கயல்விழி அவர்களின் தசாவதாரம் விமர்சனத்தை படித்தேன். இதில் என் கருத்தை கூறுவதற்கு முன், நான் இது போன்ற வலைபதிவுகளை படிக்க ஆரம்பித்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. மேலும் இது என் கருத்து தான். இதே கருத்தை வேறு ஒருவர் முன்பே சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கலாம்......

எனக்கு முன் இத்திரைப்படத்தை துவைத்து காய வைத்து, கிழித்து மீண்டும் பஞ்சாக்கியிருப்பார்கள் வேறு நண்பர்கள்.


இருந்தாலும் உங்களின் விமர்சனத்தை தான் நான் முதலில் படித்தேன். நீங்கள் கமலின் பத்து வேடம் தேவையற்றது என்று கூறியிருந்தீர்கள். கொஞ்சம் யோசித்தால் ஒரு விசயம் பிடிபடும். ஒவ்வொரு கமலும் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருப்பார். பூவராகவன் கிறிஸ்டியன், கலிபுல்லா முஸ்ஸிம், அவதார் சிங் சீக்கிய மதம், புத்த மதத்தை சேர்ந்தவராக சைனா கமல், இந்து பாட்டியாக ஒரு கமல்,பின்பு நாத்திகராக கோவிந்த் இவர்கள் அனைவரும் (நாத்திகரை தவிர) அவர்களுக்கே தெரியாமல் உலகத்தை காப்பாற்ற உதவி செய்திருப்பார்கள்.புஸ் மற்றும் கிளிஸ்டர் வேடம் மட்டும் இன்னும் எனக்கு தெளிவாகவில்லை.

இதை தான் கமல் படம் வெளிவரும் முன் ஏற்பட்ட பிரச்சனையில் இது எல்லா மதத்தினருக்கும் பிடிக்கும் என்றார். ஆக ஒவ்வொரு மதத்தினரையும் இதில் சேர்த்திருப்பதனால் இவ்வுலகத்தை காப்பாற்ற எல்லோருடைய பங்கும் அவசியம் என்பதை எடுத்துரைக்கிறார்.மேலும் பூவராகவான் மிகவும் முகம் பற்றி தேவையில்லாத ஒரு கருத்தை நிலவி வருகிறது. எனக்கு ஒன்றும் விகாரமாக தெரியவில்லை. நிறம் மட்டும் கறுப்பு. ஒரு வேளை தற்போது உண்மையாக தலித் உரிமைக்காக போராடும் தலைவரை மனதில் கொண்டு அந்நிறத்தை தேர்தெடுத்திருக்கலாம்.

ஆகவே தமிழ் திரையுலகிற்காக தன் முதலீடை திரும்ப திரும்ப இடும் உலக நாயகனை வெறும் நூறு ரூபாய் மட்டும் செலவு செய்து படத்தை பார்க்கும் நாம் விமர்சனம் செய்யும் முறை சரியா?

தன் கதாபாத்திரத்தை தவிர மற்ற கதாபாத்திரத்தை டம்மியாக்கிவிடுவார் என்று வேறு கூறியுள்ளீர். "அன்பே சிவனில்" மாதவன் சம்மதித்து தானே நடித்துள்ளார். அது அவருக்கு தெரியாதா? கமலை போன்று கனத்த கதாபாத்திரத்தை நடிக்க இன்னும் "மேடி" பல ஆண்டு உழைக்கவேண்டும். அந்த கேரக்டரே "சாக்லேட் பாய்" கேரக்டர். அதற்கு நாசரையா நடிக்க வைக்க முடியும்???. குருதிபுனல் மற்றும் தேவர் மகன் படத்தில் அவருக்கு சமமான கேரக்டர் நாசருக்கு இல்லையா???

நேற்று வந்த "புரட்சி தளபதி" "இளைய தளபதி" எல்லாம் படத்தில் அவர்களை தவிர வேறு யாரும் படத்தில் இல்லாதது போல் நடிக்கும் போது கமல் நினைப்பதில் என்ன தவறு?அதற்காக கமலின் எல்லா படமும் நல்ல படம் என்று கூறவில்லை.


பின்பு.... கொஞ்சம் பெரிதாக டைப் செய்தால் நேற்று கோவிக்கண்ணன் சொன்னது போல் பழைய ஆள் என்று முடிவுகட்டிவிடாதீர்கள். சத்தியமாக நான் வலைபதிவிற்கு புதியவன்.

படித்ததில் சுட்டது!

ஒரு சிறிய கதை

ஒரு விஞ்ஞானி நீண்ட கால முயற்சிக்கு பிறகு கால இயந்திரத்தை கண்டுபிடித்தார். தனது உதவியாளரிடம் "முதலில் 2 வினாடி பின்னோக்கி சென்று பரிசோதிக்கலாம்" என்று கூறி, 2 வினாடி போகும் படி இயந்திரத்தை கட்டளையிட்டார். பின்பு...

முதல் பத்தியை தொடர்ந்து படிக்க....

மீன்களும் பேசுமாம்!நாம் கார்டூனில் வரும் மீன்கள் பேசி பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் மீன்கள் ஒன்றுக்கொன்று பேசும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் மூளையில் மனிதனின் மூளையில் பேசுவதற்கு பயன்படும் செல்லை போன்றே செல் இருக்கிறதாம்.

என் அறிமுகம்

நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த சில மாதங்களாக பல தமிழ் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்.

மத்தவங்க blogயே பார்த்து பார்த்து நாம் எப்பொழுது ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் இன்னைக்கு தொடங்கிட்டேன்.


கதை மற்றும் கவிதைகளில் நண்பர்கள் பலரை போல் நான் கைதேர்ந்தவனில்லை என்றாலும், அரசியல், சினிமா போன்ற பல துறைகளில் என் கருத்துக்களையும், எண்ணங்களையும் பதிவு செய்ய ஆசைப்பட்டு இதை தொடங்கியுள்ளேன்.


இந்த துறையில் "பழம் தின்று கொட்டை போட்ட" நண்பர்கள் அடியேனின் ஆரம்பகால பதிவுகளில் வரப்போகும் தவறை சுட்டிக்காட்டி கூறும் அறிவுரையை ஏற்க தயாராகயுள்ளேன்.


இவண்
ஆதவன்

(பி.கு : இனிமே என்னையும் நீங்க சகிச்சுகிட்டுதான் ஆகனும்!!!!!!!! )
Related Posts with Thumbnails